வியாழன், 6 அக்டோபர், 2016

ஜெயலலிதாவின் அண்ணன் மகளை கூட அப்போலோவில் அத்தையை பார்க்க அனுமதி இல்லை

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் ஆன பின்னும்கூட, அவரை பார்க்க ரத்த சொந்தங்கள் எவரும் வந்ததாக தகவல் இல்லை. ஆனால், அவருடைய சகோதரரின் மகள் அவரை பார்க்க வந்து அப்பல்லோ நுழைவாயிலுக்குள் கூட அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமாரின் மகள் தீபா இதுபற்றி கூறும் போது, “அத்தை என்னிடம் பாசமாக இருப்பார். எனக்கு அத்தையைப் பார்க்க வேண்டும். ஆனால், மருத்துவமனை வாசலை கடந்து உள்ளே செல்ல முடியவில்லை. நான் அத்தையைப் பார்க்கச் சென்றேன். ஆனால், என்னை சந்திக்க விடவில்லை. மருத்துவமனையின் உள்ளே விட அனுமதிக்கவில்லை. என்னை சந்திக்க விடவில்லை என்றால் இங்கிருந்து திரும்பிப் போக மாட்டேன் என்றேன். உடனே நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். ஒரு உயரதிகாரி உங்களை அழைப்பார். என்றார்கள். ஆனால், எனக்கு அப்படியான அழைப்புகள் எதுவும் எனக்கு வரவில்லை” என்கிறார் தீபா. சென்னை தியாகராய நகரில் வசிக்கும் தீபா ஊடகங்கள் வழியேதான் அத்தை ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு பற்றிய செய்தியை அறிந்திருக்கிறார்.
மூன்று நாட்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த பிறகு தான், அவர் ஜெயலலிதாவின் சகோதரருடைய மகள் என்பதை மருத்துவமனை அடையாளம் கண்டிருக்கிறது. ஆங்கில இலக்கியமும், ஊடகவியல் கல்வியையும் முடித்திருக்கும் தீபா, “ஜெயலலிதாவை அனைத்து உறவினர்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் சிலர். 2012 நவம்பரில் என் அம்மா உடல்நிலை முடியாமல் இருந்தபோதும்கூட, அத்தையிடம் தகவல் தெரிவிக்க முடியவில்லை” என்று வருத்தப்படுகிறார். 1995ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமார் இறந்தபோது தங்களின் குடும்பத்தை வந்து ஜெயலலிதா பார்த்ததாகக் கூறுகிறார் தீபா. “

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரு வாரங்கள் ஆன பிறகும் கூட முதலமைச்சரை யாரும் பார்க்க முடியாதது மர்மமாக இருக்கிறது. அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த ரகசியத்துக்குப் பின் இருப்பது யார்?” என்று கேள்வி எழுப்புகிறார் தீபா.மின்னம்பலம்,காம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு வாரங்களாக உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது அண்ணன் மகள் தீபா அவரை பார்த்து ஆறுதல் சொல்ல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது. ஆளுநர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரை பார்க்க சென்றாலும் அவரை யாரும் பார்க்க முடியவில்லை என்ற செய்திகள் தான் வருகிறது.இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான அவரது அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா அவரை பார்க்க சென்றார். ஆனால் அவரை மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கவில்லை.
எனது அத்தையை பார்க்க அனுமதித்தால் தான் நான் இந்த இடத்தை விட்டு போவேன் என அடம்பிடித்தும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்து மருத்துவமனை வாயிலுக்கு சென்று காத்திருந்து காத்திருந்து தினமும் திரும்புகிறார்.சிலர் எனது அத்தையை எங்களது சொந்த பந்தத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டனர். எனது அத்தை என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு வாரம் கடந்தும் அவருக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை. இது மிகவும் மோசமான சூழ்நிலை என அவர் குற்றம் சாட்டினார்.  webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக