திங்கள், 10 அக்டோபர், 2016

குமரி அனந்தன் அதிமுகாவில்? ராமதாஸ் திருநாவுகரசு சந்திப்பு .. கூட்டணி கணக்கு கூட்டல் !

Thirunavukkarasar meets Ramadoss
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்து பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்தார். அனைத்து சந்திப்புகளிலும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என கூறி வந்தார்.
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், அதிமுகவுக்கு தாவப் போவதாக செய்திகள் வெளியாகின. குமரி ஆனந்தனும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் போனேன்… ஆனால் வேற வேலையாக என மழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீரென சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் விசாரித்தார்.
ஆனால் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை வழக்கம் போல ராகுல்காந்தி சந்திக்கவில்லை.
தற்போது சென்னை மாவட்ட பாமக அலுவலகத்தில் அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை திருநாவுக்கரசர் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது குமரி ஆனந்தனுடம் உடனிருந்தார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பா? அல்லது எதிர்கால கூட்டணிக்கான அச்சாரமா? என யூகங்கள் கிளம்பியுள்ளன.
Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக