புதன், 26 அக்டோபர், 2016

இலங்கையில் தமிழ் மாணவர்கள் கொலை: யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் கடையடைப்பு

கொழும்பு : இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழக தமிழ் மாணவர்கள் இருவரை அந்நாட்டு போலீசார் சுட்டு கொன்றதை கண்டித்து தமிழர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் ஊடகவியல் துறையில் 3ம் ஆண்டு படிக்கும் தமிழ் மாணவர்கள் விஜயகுமார்,20, சுலேக்சன்,21. இவர்கள் இருவரும் அக்., 21ல் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது யாழ்ப்பாணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மாணவர்களை வழிமறித்துள்ளனர். இருவரும் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் அங்குள்ள தமிழர்கள், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என, இலங்கை அரசுக்கு தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கண்டித்து அக்., 22ல் யாழ்ப்பாணம் தமிழர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்., 23ல் அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து மாணவர்களை சுட்டுகொன்ற இரண்டு போலீசாரை, இலங்கை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.இதற்கிடையே நேற்றும் யாழ்ப்பாணம் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் யாழ்ப்பாணம் நகர் வெறிச்சோடியது.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக