செவ்வாய், 18 அக்டோபர், 2016

சிகிச்சையில் ஜெ:தள்ளிப்போகும் தீர்ப்பு! ம்ம்ம தீர்ப்பு? வந்துட்டாலும்...

தசரா பண்டிகை விடுமுறைகள் முடிந்து நேற்றுதான் உச்சநீதிமன்றம் முழு
வீச்சுடன் தன் அலுவல் பணிகளைத் துவங்கியிருக்கிறது. இந்நிலையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வருகிற 18-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்ற தகவல்கள் வெளியான நிலையில் உச்சநீதிமன்ற பட்டியலில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரிசையிடப்படாததால் தீர்ப்பு தள்ளிப் போகலாம் என்று தெரிகிறது.
முதன்முதலாக,தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 -ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழிசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூருசிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த ஆண்டு தீர்ப்பளித்தார்.
இதையொட்டி சிறைக்குச் சென்றஜெயலலிதா, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்தஉத்தரவுக்கு எதிராக கர்நாடகா அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டது. இந்த வழக்குஉச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
தீர்ப்பு எப்போது?
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இம்மாதம் நேற்று 17, அல்லது இன்று 18 தேதிகளில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது எப்படி உருவானது இந்த எதிர்பார்ப்பு?
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா அவர் தன் வாழ்வு பற்றி சுயசரிதை ஒன்றை எழுதினார்.
அந்த சுயசரிதையில், சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி எழுதியிருந்தார். “சொத்துக்குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன’என்று குறிப்பிட்டிருந்தார். நூலின் இந்த பகுதி பெரும் விவாதங்களைக் கிளப்பியது.இந்நூலை மேற்கோள் காட்டி தமிழகத்தைச் சார்ந்த மூத்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான வழக்கறிஞர் பொ.ரத்தினம் உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனுவில் “‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஆச்சார்யாஆஜரானபோது அவருக்கு அழுத்தங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார். எனவே, அவரிடம் விசாரணைநடத்த வேண்டும். இந்த வழக்கில் ஆச்சார்யா நேர்மையான முறையில் ஆஜராகி செயல்பட்டாராஎன்பதையும் விசாரிக்க வேண்டும். அவர், தனது புத்தகத்தில் கூறியுள்ள புகார்கள்,குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்என்றும் வலியுறுத்தியிருந்தார்.
ரத்னம் தாக்கல்செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகிசந்திர கோஸ், அமிதவா ராய்ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்தனது வாதத்தை முன்வைக்க வந்தார். ஆனால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குஒத்திவைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையைஒத்திவைக்க காரணம் என்ன என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கேள்விஎழுப்பினார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டுவழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த வழக்குவிசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். நீதிபதிகள் குறிப்பிட்ட நான்கு வாரங்கள் முடிந்து விட்டது. உச்சநீதிமன்றத்தின் வழக்குப் பட்டியலில் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய விபரங்கள் எதுவும் இல்லை.தசரா பண்டிகை முடிந்து நீதிமன்றம் நேற்று செயல்படத் துவங்கிய நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு பட்டியலிடப்படவில்லை.இந்நிலையில்தான் செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை முதல்வரின் உடல் நிலை தொடர்பாக இதுவரை 10 அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது. அதில் ஒன்பதாவது அறிக்கையில் ஜெயலலிதா நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஜெயலலிதாவை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் இருக்கும் சசிகலா நடராஜன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் அடக்கம் என்பதால் ஜெயலலிதா சிகிச்சை முடிந்து திரும்பியதும் இந்த தீர்ப்பு பட்டியலிடப்படும்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக