புதன், 5 அக்டோபர், 2016

மகளை காதலித்தவரை திருமண பேச்சுக்கு அழைத்து கொலை செய்த தந்தை: நெல்லை..

சிவகுருநாதன்              லட்சுமணப் பெருமாள்
மகளை காதலித்தவரை திருமண பேச்சுக்கு அழைத்து வெட்டிக் கொலை செய்த தந்தை போலீசில் சரண் அடைந்தார்.நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் அருகே தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகள் கஸ்தூரி நர்சிஸ் படிப்பு முடித்து திண்டுக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அப்போது திண்டுக்கல் மாவட்டம், நெய்காரப்பட்டியைச் சேர்ந்த சிவகுருநாதனுடன் கஸ்தூரிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இந்த விவகாரம் லட்சுமணப் பெருமாளுக்கு தெரிய வந்ததும், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர். பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருமண பேச்சுக்காக சிவகுருநாதனை வீட்டுக்கு அழைத்துள்ளார் லட்சுமணப் பெருமாள். இதனை நம்பி தேவகுளத்தில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு சென்றுள்ளார் சிவகுருநாதன். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிவகுருநாதனை வெட்டி படுகொலை செய்துள்ளார் லட்சுமணப் பெருமாள். பின்னர் அரிவாளுடன் சங்கரன் கோவில் காவல்நிலையத்தில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லட்சுமணப் பெருமாளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக