வெள்ளி, 14 அக்டோபர், 2016

முழுப் பூசணிக்காயை ஊடகங்களில் மறைத்துவிட்டு வதந்தி வதந்தி என்று கைது பண்ணுவது அராஜகம்!

சமீபத்தில் தமிழக முதல்வரைப்பற்றி செய்திகள் வெளியி்ட்டதினால் சிலரை
கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்..இந்நிலையில் நேற்றுகூட இருவரை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது...
இப்படி உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடுகின்றவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக காவல்துறையினர் இதோ பாருங்கள் தமிழக முதல்வர் நலமாக உள்ளார் படம் இதோ பாருங்கள் என கைது செய்வதற்கு முன்பாக விளக்கம் அளித்துவி்ட்டாவது கைது செய்திருக்கலாம்
அல்லது தமிழக முதல்வர் என்பதால் நாங்கள் எல்லோரும் என்ன ஆயிற்று என கேட்ககூடாதா அல்லது விபரம்தெரியகூடாதா என்பதையாவது விளக்கம் அளிக்கலாம் அல்லது சாதாரண காய்ச்சல் என அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்துள்ள தமிழக முதல்வருக்கு லண்டனிலிருந்து மருத்துவர் வரவேண்டிய அவிசயம் ஏன் என நாங்கள் யாவரும் தெரிந்துகாெள்ளகூடாதா அல்லது அப்போலோ மருத்துவ அதிகாரிகள் முதல்வர் செயலலிதா அவர்கள் சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது பிசியோ தெரபி மருத்துவம் நடைபெறுகிறது என சொல்கிறார்கள் .ஆ னால் அமைச்சர்கள் எம், எல் , ஏக்கள் பலரும் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அம்மா இட்லி சாப்பிடுகிறார் அம்மா பேப்பர் பார்க்கிறார் அம்மா டீ, வி பார்க்கிறார் என தகவல்தருகிறார்கள் இதெல்லாம் செய்ய முடிகின்ற முதல்வருக்கு ஏன் எனக்கு உடல்நிலை நன்றாக தான் இருக்கு நான் நலமுடன் இருக்கின்றேன் என தகவல் தரமுடியாதா என நாங்கள் கேட்ககூடாதா?

அல்லது
சமீபத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்த சகிக்கலா புஸ்பாராணி அவர்கள் அம்மா அவர்கள் மூளைசாவு அடைந்துவிட்டார் அவர் கையெழுத்தை பயன்படுத்தி பிறர் துணை முதல்வர் ஆகிவிடுவார் என மிகவும் மன தைரியத்துடன் பல விசயங்களை மீடியாவிற்கு எடுத்து சொன்னார் அவர்களை ஏன் இந்த தமிழக அரசு கைது செய்யவில்லை என நாங்கள் கேட்ககூடாதா
அல்லது
சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அமைச்சர் பொன்னையன் அவர்கள் பேசும்போது தமிழக முதல்வரிடம் ஆலோசனை தினம் பெறுகின்றோம் பல கருத்துகளை அம்மாவிடம் பேசிதான் அம்மாவின் வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் துறைவாரியாக செயல்படுகின்றோம் என தகவல் தருகின்றார்
இதெல்லாம் முடித்த முதல்ரால் ஒரு மீடியாவிற்கு செய்தி கொடுக்கமுடியாதா என நாங்கள் கேட்பதுதவறா
அல்லது
கர்நாடகாவில் தமிழர்களின் பேருந்து அடித்து உடைத்தும் பல வழிகளில் கொடுமைசெய்த பல கண்ணடர்களை கைது செய்யாமல் இருக்கிறார்கள் அதைவிட நாங்கள் 18 நாட்களாக தமிழக முதல்வர் உண்மை நிலை என்ன என கேட்ககூடாதா என்ன ...
தமிழக அரசு பொறுப்புள்ள அரசாக இருந்தால் தமிழகத்தின் முதல்வர் என்பதால் அவரைபற்றி வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்து பிரச்சனைக்கு முடிவுகாணுங்கள் ., என்ற கருத்துக்களை கூறி உள்ளார் திரு .முத்துராமலிங்க கிருஷ்ணன் - சீனியர் வழக்கறிஞர் , சென்னை  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக