சனி, 29 அக்டோபர், 2016

ஜெயலலிதாவை போயஸ்கார்டனுக்கு கொண்டு செல்ல சசிகலா முயற்சி .. தடுத்த லண்டன் டாக்டர்! கார்டன்லன்னா இஷ்டப்பட்ட அளவு பெருவிரல் கைரேகை அழுத்தலாம் சொத்துக்களை மாத்தலாம்



“தீபாவளிக்கு முன்னர் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல சசிகலா நடராஜன் விரும்பிய நிலையில், அதற்கு மருத்துவர்கள் அனுமதிப்பார்களா? சிகிச்சையில் இருக்கும் ஜெயலலிதா இன்று வீடு திரும்புவாரா?” என்று மதியம் ஒரு மணி செய்தியில் விரிவாக குறிப்பிடுவதாக எழுதியிருந்தோம். “இன்று காலை முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் தீவிரமான ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். அவரது உடல்நலம் தொடர்பான பல்வேறு அறிக்கைகள், பரிசோதனைகளைச் செய்தவர்கள் அதை லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அங்கு அதிகாலை என்பதால் அவரிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. இங்குள்ள நிலைமைகளை விரிவாக அனுப்பியிருக்கும் இவர்களது ரிப்போர்ட்டுகளை வைத்துதான் ரிச்சர்ட் பேல் ஆய்வு செய்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்பது அந்த செய்தியின் சாராம்சம்.

“அப்பல்லோவில் இருந்து இன்று காலை அனுப்பிய மெடிக்கல் ரிப்போர்ட்களை லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் பார்த்துவிட்டாராம். ஆனால், அவரிடம் இருந்து பாசிட்டிவ் ஆன பதில் வரவில்லை என்கிறார்கள். ‘நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். சாதாரண ஐ.சி.யூ-வாக இருந்தால் வீட்டில் ரெடி செய்துவிடலாம். ஆனால், இது சிசியூ. இதை அப்படி செய்ய முடியாது. வீட்டுக்குப் போனதும் எதுவும் கிரிட்டிக்கல் ஆனால் என்ன செய்வது? என்னோட அட்வைஸ் நோ டிஸ்சார்ஜ்’ என இன்று மாலை தெளிவாக சொல்லிவிட்டாராம் டாக்டர் ரிச்சர்ட்.
அப்பல்லோவில் உள்ள டாக்டர்களிடம்தான் ரிச்சர்ட் பேசியிருக்கிறார். அதன் பிறகு அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவக்குமாருடன் டிஸ்கசன் செய்திருக்கிறார்கள். அப்போது, ‘வீட்டுக்கு மேடமை ஷிஃப்ட் பண்ண எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், டாக்டர் ரிச்சர்ட், ‘இப்போ அவங்களை ஷிஃப்ட் பண்றது அட்வைஸபிள் இல்லை’ என்று சொல்லிவிட்டார். அவரோட கெய்டன்ஸ் படிதான் நாம இப்போ ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கோம். அவர் வேண்டாம்னு சொல்லும்போது நாம் ஷிஃப்ட் பண்ணினால் அது நல்லா இருக்குமா?’ என்று கேட்டார்களாம் அப்பல்லோ மருத்துவர்கள். டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்போது உடன் இருந்திருக்கிறார்கள்.
எய்ம்ஸ் மருத்துவர்களும் அதை ஆமோதித்து இருக்கிறார்கள். ‘சாதாரணமாக இந்த சூழ்நிலையில் இருக்கும் ஒரு பேஷண்ட்டை நாம் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம். மேடம் இருக்கும் கண்டிஷன் நமக்கு தெரியும். அப்புறம் எப்படி அவங்களை அனுப்ப முடியும்?’ என்று அவர்களும் சொன்னார்களாம். அதையெல்லாம் கேட்ட டாக்டர் சிவக்குமார், ‘நீங்க சொல்றது எல்லாம் சரிதான். நான் சின்னம்மாகிட்ட பேசுறேன். அவங்கதான் மேடத்தை வீட்டுக்கு அழைச்சுட்டு போகணும். தீபாவளி நேரத்துல ஹாஸ்பிட்டல் வேண்டாம்னு சென்டிமெண்ட்டா ஃபீல் பண்றாங்க…’ என்று சொன்னாராம். அதற்கு எய்ம்ஸ் டாக்டர்கள், ‘அவங்களுக்கு மெடிக்கலா என்ன நடக்குதுன்னு எப்படி தெரியும்? நீங்கதான் சொல்லி புரிய வைக்கணும். நீங்க சொல்ற சென்டிமெண்ட் எல்லாம் சரிதான். ஆனாலும் அது எல்லாத்தையும் விட அவங்க ஹெல்த் முக்கியம் இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
அதன் பிறகு இரண்டாவது தளத்தில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே சசிகலா தங்கியிருக்கும் அறைக்கு சிவக்குமார் போயிருக்கிறார். அங்கே நீண்ட நேரம் டிஸ்கசன் நடந்திருக்கிறது. அதன் பிறகு வெளியில் வந்த டாக்டர் சிவக்குமார் மீண்டும் அப்பல்லோ மருத்துவர்களிடம் பேசியிருக்கிறார். ‘சின்னம்மாகிட்ட பேசிட்டேன். அவங்களைச் சமாதானப்படுத்தவே முடியலை. எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குப் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் என்றுதான் அவங்க சொல்லிட்டு இருக்காங்க. இப்போதைக்கு எதுவும் பிரச்னை இல்லை. இங்கேயே ட்ரீட்மெண்ட் தொடரட்டும்’ என்று சொன்னாராம். ஆக, தீபாவளிக்கு போயஸ் கார்டன் இல்லை என்பது உறுதியாகிவிட்டது” என்று முடிந்தது அந்த நீண்ட மெசேஜ்.

“சசிகலா வேறு என்ன சொன்னாராம்?” என்று கேட்டது ஃபேஸ்புக்.
பதில் அடுத்த மெசேஜ் ஆக வந்தது. “போயஸ் கார்டன் வீட்டுக்கு ஜெயலலிதா வந்த பிறகு எந்த வருடமும் தீபாவளிக்கு வெளியூர் போனது இல்லை. 36 வருடங்களாக அதே வீட்டில்தான் தீபாவளி கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ஜெயலலிதா அங்கே இல்லை என்பதுதான் சசிகலாவின் வருத்தம். அதற்காகத்தான் எப்படியாவது ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துப் போய்விட வேண்டும் என முயற்சி செய்தார். அது முடியவில்லை. ‘அக்கா ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு வீட்டுல துர்க்கா பூஜையை நடத்துவாங்க. நாளைக்கு காலையில் நான் வீட்டுக்குப் போய் விளக்கேற்றி பூஜை செஞ்சிட்டு வரேன்’ என்று இளவரசியிடம் சொன்னதாக சொல்கிறார்கள்.
இதற்கிடையில், தீபாவளிக்குள் எப்படியாவது முதல்வர் வீடு திரும்பிவிடுவார் என அமைச்சர்களும் உற்சாகமாக இருந்தார்கள். இப்போது அது இல்லை என்று முடிவானதும் அவர்களும் அமைதியாகி விட்டார்கள். ‘ஸ்வீட் கொடுக்குறேன்னு யாரும் வீட்டுக்கு வந்துட போறங்க… யாரையும் வீட்டுக்கு வரக் கூடாதுன்னு சொல்லிடுங்க..’ என அமைச்சர்கள் சர்குலர் அனுப்பாத குறையாக தங்களது உதவியாளர்களிடம் சொல்லி விட்டார்கள். அதேபோல, முதல்வர் வீடு திரும்பிவிட்டால், தீபாவளிக்குச் சொந்த ஊருக்கு கிளம்பிவிடலாம் என்ற எண்ணத்திலும் பல அமைச்சர்கள் இருந்தார்கள். இப்போது அந்த திட்டமும் கைவிடப்பட்டது. அமைச்சர்களுக்கும் இந்த ஆண்டு அப்பல்லோவில்தான் தீபாவளி!” என்று முடிந்தது அந்த பதில் மெசேஜ்.
“சீக்கிரம் குணமடைந்து முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பட்டும். வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!” என்ற நாலு வரி ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்து சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக