இதனிடையே, இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனைக்குள் சென்று அமைச்சர்களிடமும் மருத்துவர்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அரைமணி நேரம் மருத்துவமனைக்குள் இருந்த குஷ்பு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினார். பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தேன். மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டாக்டர்களை சந்தித்துப் பேசினேன். அவர்களிடம் முதல்வர் உடல்நலம் பற்றி கேட்டறிந்தேன். முதலமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வேகமாக குணமடைந்து வருகிறார் என்று கூறினார்கள். தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா உணவு சாப்பிட்டு வருகிறார். பிசியோதெரபி சிகிச்சை நல்ல பலன் கொடுத்துள்ளது என்றனர். அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சல்மிக்கவர். தைரியமான பெண்மணி. அவர் விரைவில் பூரண நலம்பெற வேண்டும். அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அவருக்காக காத்திருக்கிறார்கள். தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு அவர் வீடு திரும்பி மக்களோடு தீபாவளியைக் கொண்டாட வேண்டும். இவ்வாறு குஷ்பு கூறினார்.
திங்கள், 24 அக்டோபர், 2016
குஷ்பு அப்போலோ வருகை .. தீபாவளிக்கு அவர் வீடு வரணும் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக