ஞாயிறு, 9 அக்டோபர், 2016

மின்னம்பலம்;முதல்வர் கவலைக்கிடம்!

சுயநினைவின்றி 22ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய நிலைமை அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜெயலலிதாவின் உடல்நிலைக் குறித்து சென்ற தகவல்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்றைய விடியற்காலை அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று மதியம் சென்னையில் இருந்து மும்பை சென்ற தமிழக பொறுப்பு கவர்னரை உடனடியாக சென்னைக்குத் திரும்புமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆருக்கு நடந்ததுபோல் ஏதாவது அதிசயம் நடந்து முதல்வரின் உடல்நிலைக் குறித்து மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக