சனி, 29 அக்டோபர், 2016

உள்ளாட்சி தேர்தல் மனுவில் கையெழுத்து - இடைத்தேர்தல் மனுவில் கைநாட்டு : அதிமுக மீது பாயப்போகும் வழக்கு.. மோசடி அம்பலம்

ஜெ. உடல் நலம் இல்லாமல் சுய நினைவின்றி கடந்த மாதம் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்ட உடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதற்காக ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் தமிழகம் எங்கும் களம் இறங்கினார்கள். மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் அரசியல் கட்சிகள் தங்கள் சின்னத்துடன் நேரடியாக மோதும் இடங்களில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு பி - பார்ம் எனப்படும் கட்சி தலைமையின் அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டது;"
அந்த பி-பார்ம்களில் கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவின்n கையெழுத்து பெறப்பட்டிருந்தது.  வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஜெ.வின் கையெழுத்தோடு  வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திடீரென உள்ளாட்சி தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
உள்ளாட்சி தேர்தல் என்பது மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல் என்பதால் ஜெ. சுய நினைவுடன் கையெழுத்து போட்டாரா இல்லையா என்பது கேள்விக்குறியாக்கப்படவில்லை.  தடை விதிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் ஜெ. போட்ட கையெழுத்தை பற்றி யாரும் கவலைப்படவில்லை.  உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுவில் இடம் பெற்றிருந்த ஜெ.வின் கையெழுத்து இடைத்தேர்தல் மனுவில் இடது கை பெருவிரல் கைநாட்டாக மாறியது.

அரசு டாக்டர் பி.பாலாஜி இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். அதற்கு சாட்சியாக அப்பல்லோவில் ஜெ.வுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய குழுவின் தலைவராக இருக்கும் டாக்டர் பாபு ஆபிரஹாம் சாட்சி கையெழுத்து போட்டிருக்கிறார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்சி அங்கீகார கடிதமான பி -பார்ம் விவாதத்தை கிளப்பியுள்ளது.

;உள்ளாட்சி தேர்தலுக்கு கையெழுத்து போட்ட ஜெ. அந்த நேரத்தில் இன்று இருப்பதை விட மிக மோசமாக சுயநினைவு அற்ற நிலையில் இருந்தார்.  அப்போதே கையெழுத்திட்ட நிலையில், இப்போது ஜெயலலிதாவின் கைநாட்டை பெற்று இடைத்தேர்தலில் வேட்புமனுவை சமர்ப்பித்திருக்கிறார்கள். இந்த முரண்பாட்டை கேள்விக்குறியாக்கி வழக்கு தொடர, மூத்த வழக்கறிஞர் துரைசாமி ஆலோசித்து வருவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - தாமோதரன் பிரகாஷ்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக