thetimestamil.com
இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா? ரொம்ப அவசியம்னா யாராவது மன்னார்குடி வீட்டு குழந்தைகளுக்கு குத்தவேண்டியதுதானே ?”
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்கிறது ஜெயா டிவி இணையதளம். மேலும் இந்த செய்தியில் தமிழகம் முழுக்க முதலமைச்சர் நலனுக்கான நடைபெற்ற பிரார்த்தனைகள் பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, நேத்தாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் கோயிலில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், அலகு குத்தி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, தண்டையார்பேட்டையில் உள்ள சேனியம்மன் ஆலயத்தை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் வழிபாடு நடைபெற்றது.இதில் கழக நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
சென்னை, மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. சிறப்பு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
தேனியில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மஞ்சள், பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில், கூட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கொரடாச்சேரி ஒன்றியம் திருக்கண்ணமங்கையில் உள்ள ஸ்ரீஅபிஷேக வள்ளி தாயார் சமேத பக்தவச்சலபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்னையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மனமுருகி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். என்கிறது இணையதள செய்தி. இவ்வாறு தொண்டர்கள் அலகு குத்திக் கொள்வது அவரவர் விருப்பம் சார்ந்ததுதான் என்றாலும் குழந்தைகள் அலகு குத்த வைத்து துன்புறுத்துவது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
எழுத்தாளர் சரவணன் சந்திரனின் முகநூல் பதிவு இது:

அமைச்சர்கள்,
கட்சிக்காரர்களான பெரியவர்கள் இப்படிக் குத்தியிருந்தால், அது அவர்களின்
தேர்வு. அது அவர்களின் நம்பிக்கை என்று பேசாமல் கடந்து
போயிருந்திருக்கலாம். இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான்
கிடைத்தார்களா? இதையெல்லாம் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட குழந்தைகள் நல
அமைப்பிற்கெல்லாம் கோபமே வராதா? ஏன் எனக்கும்கூட வருவதில்லை. இத்தனைக்கும்
கண்டிசனாக டாடா சால்ட் போட்டுத்தான் சாப்பிடுகிறேன். சே சே மனசைப் போட்டுக்
குழப்பிக் கொள்ளக் கூடாது. உப்பில்தான் பிரச்சினையாக இருக்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக