சனி, 22 அக்டோபர், 2016

திரைக்கு வராத கதை .. பெண்கள் மட்டுமே நடிக்கும் புதிய முயற்சிக்கு யு எ சான்றிதழ் கொடுத்தது அநியாயம்


இந்திய சினிமாக்களில் பெண்களை வெறும் காட்சிப் பொருளாக
பயன்படுத்தியே பெரும்பாலான படங்கள் வருகின்றன. ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளே இங்கு அதிகமாக உலா வருகிறது. ஆடிக்கு ஒரு தடவையோ இல்லை, அமாவாசைக்கு ஒரு தடவையோதான் பெண்ணின் கதாபாத்திரத்தை முன்னிறுத்திய படங்கள் வெளிவருகின்றன. இதுபோன்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஆண் கதாபாத்திரங்களே இல்லாமல் ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு புதிய முயற்சியை எடுத்திருக்கிறார் மலையாள இயக்குநர் துளசிதாஸ். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது இந்தத் திரைப்படம். நடிகை நதியா, இனியா, கோவை சரளா, ஈடன், ஆர்த்தி, ஆரதி ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள ‘திரைக்கு வராத கதை’ தான் அந்தத் திரைப்படம். பெண்ணுணர்வு சார்ந்த ‘லெஸ்பியன்’ உறவை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சில உணர்வு ரீதியான காட்சிகளை காட்ட, கவர்ச்சியான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது அங்குள்ள உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆபாச காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர முடியாது என்று மறுத்தனர். பின்னர் பெண்ணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளை, ஆபாசமாக இருப்பதாக கூறி நீக்கிவிட்டு, ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மினன்ம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக