புதன், 19 அக்டோபர், 2016

இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது'

''பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் எடுத்ததை போன்ற அதிரடி
நடவடிக் கையை, நம் ராணுவம் செய்து காட்டியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள, முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கும் ஹிமாச்சல பிரதேசத்தில், மூன்று நீர்மின் திட்டங்களை, நேற்று, நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
பிரதமரான பின், முதன்முறையாக, ஹிமாச்சல பிரதேசத்துக்கு சென்றுள்ள மோடி, மண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:இந்த மாநிலம், ஒரு வீர பூமி; ராணுவத்திற்கு நிறைய வீரர்களை
அளித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'ஒரு பதவி, ஒரே சம்பளம்' முறையை, ராணுவத்தினருக்கு கொண்டு வரப்படும் என, இங்கு அறிவித்தேன்;தற்போது, அதை நிறைவேற்றி யுள்ள மகிழ்ச்சியுடன், இங்கு வந்துள்ளேன்.  இஸ்ரேல் என்றால் அரபு நாடுகளுக்கு மிக கசப்பாக இருக்கும அவர்களின் வாயிலாக கிடைக்கும் அந்நிய செலவாணியை பாதிக்கும் வகையில் நம் பேச்சு இருக்க கூடாது. இஸ்ரேலினால் நமக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை.  வெத்துவேட்டு அந்நிய செலாவணிக்கு உலைவைக்கும் பாத்து ? ஆமா இதையே எவ்ளோ நாள் ஓட்டுவீங்க? UP தேர்தல் வரை தானே?


எதிரி நாடுகளிலும், பயங்கரவாதிகள் மீது, 'சர்ஜிக் கல் ஸ்டிரைக்' எனப்படும், அதிரடி தாக்குதலை, இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது குறித்து இதுவரைபேசி வந்தோம்.

தற்போது, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை, நம் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்துள்ளது குறித்து, நாடு முழு வதும் பேசப்படுகிறது. எந்த நாட்டுக்கும் சளைத்தவர் கள் அல்ல என்பதை, நம் ராணுவம் நிரூபித்துள்ளது.

நாடு முழுவதும், பா.ஜ.,ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்களுக்கு, தனிச் சிறப்புகள் உள்ளன. ஒரு முதல்வரை, தண்ணீர் முதல்வர் என்கின்றனர்

மற்றொருவரை, சாலை முதல்வர் என்று கூறுகின்ற னர். இவ்வாறு, மக்களுக்கான ;திட்டங்களை போட்டி போட்டு நிறைவேற்றி வருகின்றனர். அதே நேரத் தில், ஹிமாச்சல் முதல்வர், ஊழல் வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதிலேயேகவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
'தலித் மீதான கொடுமை தலைக்குனிய வைக்கிறது!' :

''
நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளான பின் னும்,தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமை களை எண்ணும் போது, தலைக்குனிவாக உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில், தேசிய, எஸ்.சி., மற்றும் பழங்குடியினருக்கான திட்ட துவக்க விழாவில், நேற்று பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது:

நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இருப்பினும், தலித் மக்களுக்கு எதிராக, அவ்வப்போது நிகழும் கொடுமைகளை எண்ணும் போது, வெட்கி தலைக்குனிய வேண்டி உள்ளது.

நாட்டில், தலித் மக்களுக்கு உள்ள வேட்கைகள், பிற சமூகத்தவரை விட அதிகமாக உள்ளன. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், இந்தியா வின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பணி களில், பின்தங்க மாட்டர். இவ்வாறு பேசினார்.  dinamalar.kaam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக