ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மாட்டு மூத்திரம் குடிக்கும் கண்றாவி .... நவீன மருத்துவ பார்வையில்..

உன்னுடைய மாதாவின் பிணத்தை நீயே தூக்கிப் போட்டுக் கொள்” என்று குஜராத் தலித்துகள் பார்ப்பன இந்துமதவெறியின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து விட்டாலும், சோர்ந்து விடாத காவி கும்பல், தங்கள் ‘புனித அன்னையின்’ புகழைப் பரப்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோமாதாவின் மூத்திரத்தையும் சாணியையும் அள்ளி வந்து ஆராய்ச்சி செய்கின்றனர். ஏன் மாட்டுமூத்திரத்தை கையில் எடுத்துள்ளார்கள்? நடுத்தர வர்க்க அப்பாவி இந்தியர்களின் தலையில் எதையாவது கட்ட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இன்னன்ன பொருளைத் தின்றால் / பயன்படுத்தினால் – ஆண்மை பெருகும், இளமை மீளும், வழுக்கையில் முடி முளைக்கும், விரை வீக்கம் அகலும், ஆண் குழந்தைப் பேறு கிட்டுவதோடு புற்றுநோய் கூட குணமாகும் என்று குன்சான ‘அறிவியல்’ ஆய்வுகளை பரப்பி விட்டால் போதுமானது.
குறிக்கப்பட்ட பொருள் மனித மலமாக இருந்தாலும் அள்ளி அப்பிக் கொள்வதே நமது பெருமைக்குரிய பாரம்பரியம். நீரிழிவு மற்றும் கான்சர் நோயைக் குணப்படுத்தும் அருமருந்து என இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனிய மூடர்களிடையே விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் மாட்டு மூத்திரத்தின் விலை 12ரூபாய. இப்பின்னணியில் மாட்டுமூத்திரம் என்பது என்ன? ஏன் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மாட்டுமூத்திரத்தை கையில் எடுத்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது இவ்வீடியோ! எல்லா வகை சிறுநீர்களையும் அறிவியல் மற்றும் நவீன மருத்துவம் எப்படிப் பார்க்கிறது, இந்த உண்மைகளை இந்துமதவெறியர்கள் எப்படி மறைக்கிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படம் விளக்குகின்றது. பாருங்கள் – பகிருங்கள்! வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக