வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஜெயலலிதாவுக்கு நினைவு இருக்கிறதா? இல்லையா? பெருவிரலை பதித்து யார் அதிகாரம் செலுத்துவது? யார் இந்த போர்ஜ்ரி 420 வேலையை செய்து இருப்பார்கள்?

Special Correspondent FB Wing 5 mins · இடைத்தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களின் All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) கட்சி அங்கீகார கடிதமான பி -பார்ம் விவாதத்தை கிளப்பியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு கையெழுத்து போட்ட ஜெ. அப்போதே கையெழுத்திட்ட நிலையில், இப்போது ஜெயலலிதாவின் கைநாட்டை பெற்று இடைத்தேர்தலில் வேட்புமனுவை சமர்ப்பித்திருக்கிறார்கள். உடல் நலம் தேறி வருகிறார் , வதந்தி பரப்பியவர்கள் கைது என்றெல்லாம் பேசிய நிலையில் , பேசுகிறார் தீபாவளி வீடு திரும்புகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் ஏன் கைநாட்டு போட வேண்டும்... நடந்தது என்ன .. சிபிஐ விசாரணையை ஜெயலலிதாவை சுற்றி ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் மீதும் , முக்கியமாக ஒப்புதல்  சாட்சி கையெழுத்து போட்ட 1) அரசு டாக்டர் பி.பாலாஜி 2) அப்பல்லோவில் ஜெ.வுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய குழுவின் தலைவராக இருக்கும் டாக்டர் பாபு ஆபிரஹாம் மீதும் #CBI விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை #அதிமுக கட்சி உள்ளே கேக்க ஆரம்பித்து உள்ளது 
பேசினார்கள் என்று சொன்னிர்கள் கடைசியில் கைநாட்டு #jayalalithaa போட்டு இருக்கிறார் .. யார் இந்த போர்ஜ்ரி 420 வேலையை செய்து இருப்பார்கள் மாலன் நாராயணன் Rangaraj Pandey Sumanth Raman Gunaa Gunasekaran Nelson Xavier ..


tamiloneindia.com  இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக வழங்கப்படும் படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல், சிங்கப்பூர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்படும் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் மருத்துவர்களுடன் பேசி வருவதாகவும் 11வது அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தை பயன்படுத்துவதற்காக அதிமுக வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட form B படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்து போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்த போது, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த form B படிவத்தில்  ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அவரின் பெருவிரல் ரேகை மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் பெருவிரல் ரேகை வைக்கும் அளவிற்குத்தான் ஜெயலலிதாவின் உடல்நிலை உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக