புதன், 5 அக்டோபர், 2016

இரவிரவாக சசிகலா அன் கோ ரகசிய ஆலோசனை...

ஏழு நாட்களுக்குப் பின் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி இரவில் ஏழு நாட்களுக்குப் பின் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி இரவில் அப்பல்லோவிலிருந்து சசிகலா வெளியே வர, அவரது கார் வேகமாக சென்றது. மறுநாள் மகாளய அமாவாசை என்பதால் போயஸ்கார்டனில் சிறப்பு பூஜைகளுக்காக சின்னம்மா செல்கிறார் என்றனர் அங்கிருந்த அ.தி.மு.க.வினர். ஆனால், நள்ளிரவில் அவர் சென்றது பெசன்ட் நகர் பகுதிக்கு. அங்கு தனது முக்கியமான உறவினரை சந்தித்து விடியற்காலை 3.30 வரை விவாதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி கார்டனுக்கு வந்துவிட்டு விடிவதற்குள் மருத்துவமனைக்குத் திரும்பிவிட்டார். கடந்த சில நாட்களாகவே நள்ளிரவில் நடக்கின்றன ராஜ ஆலோசனைகள் என்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர்கள். பெசன்ட் நகர் வீட்டிற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ரகசிய வருகையும் அதிகரித்திருக்கிறது.

2011 ஜெ. ஆட்சியின்போது சிறப்பு அதிகாரியாக(ஓ.எஸ்.டி) நியமிக்கப்பட்டிருந்தார் ஐ.ஏ.எஸ்.அதிகாரி பன்னீர்செல்வம். கார்டனிலிருந்து மன்னார்குடி தரப்பினர் வெளியேற்றப்பட்டபோது, பன்னீர் செல்வத்தையும் ஓ.எஸ்.டி. பதவியிலிருந்து விலக்கி தலைமைச் செயலகத்திலிருந்து வெளியேற்றினார் ஜெ. அவர் தற்போது மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளார். ஜெ. அட்மிட்டாகியுள்ள அப்பல்லோவில், எம்.நடராஜன் சகோதரி வனரோஜா கடந்த 24-ந் தேதி அட்மிட் செய்யப்பட்டார். தஞ்சையில் சொந்தக்காரர்களின் மருத்துவமனை உள்பட அப்பகுதியில் நிறைய மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படும் நிலையில், அப்பல்லோவில் புது நோயாளிகளை அனுமதிக்க கட்டுப்பாடு உள்ள சூழலில், வனரோஜா அட்மிட்டானது கட்சியினர் மற்றும் உயரதிகாரிகளின் புருவத்தை உயர வைத்துள்ளது. அவரது அட்டெண்டர்களுக்காக 6 பாஸ்கள் பெறப்பட்டு, அதிகாரிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பரிச்சயமில்லாத மன்னார்குடி சொந்தங்கள் ...  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக