ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான துறைகள்:
தொற்றுநோய்
கிரிட்டிகல்/ இன்டன்சிவ் கேர்
சர்க்கரை நோய்
நுரையீரல்
இதயம்
இவை தவிர, டயட், பிசியோதெரப்பி பயிற்சி நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

முதல்வர்
ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம்
நிறைவடைந்துவிட்டது. இந்த ஒரு மாத காலமாக, முதல்வரின் உடல்நிலை பற்றிய
அரசின் குரலாக அப்போலோ மட்டுமே ஒலித்துவருகிறது. ஜெ.க்கு என்ன வகையான நோய்
அறிகுறிகள் இருக்கின்றன, என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு
வருகின்றன, அவரது உடல்நிலை பற்றி விவாதித்து சிகிச்சை முறைகளை
முடிவுசெய்யும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர் குழுக்கள் பற்றிய தகவல்களை
அறிக்கைகள் வழியாக அப்போலோதான் வெளியிட்டு வந்தது. அதுவும், 10 நாட்களாக
அறிக்கை எதுவும் தரவில்லை.
ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கக் காரணமாக இருந்தது டாக்டர் சிவக்குமார். ஜெயலலிதாவுக்கு, நுரையீரல் நிபுணர் நரசிம்மன், சர்க்கரை நோய் நிபுணர் சாந்தாராம் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு, லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர் குழு என தொடர்ந்து நிபுணர் குழுவை மாற்றிவருகின்றனர். தற்போது ஜெயலலிதாவை தன் மருத்துவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிபுணர் குழுவினர் யார்? யார்?
இது சிங்கப்பூர் ஸ்பெஷலிஸ்ட்!

ரிச்சர்ட் பியெல்
லண்டனின் புகழ்பெற்ற செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மற்றும் வலி தொடர்பான சேவை, அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய சேவைப் பிரிவின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். திடீர் நுரையீரல் பாதிப்பு, ஸெப்ஸிஸ் (செப்டிசீமியா) எனப்படும் பாக்டீரியாத் தொற்று ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு காரணமாக அளிக்கப்படும் செயற்கை சுவாசம் (வென்டிலேஷன்), ஒன்றுக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் செயல் இழந்தவர்களுக்கான சிகிச்சை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர், ரிச்சர்ட் பியெல். இவர், கேய்ஸ் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவப் பயிற்சி பெற்றிருக்கிறார்.

ஸெப்ஸிஸ்
தொடர்பாக உலக அளவில் நடத்தப்படும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை ஆய்வு
செய்பவர். லண்டனில் புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் அவசரச் சிகிச்சை
மருத்துவப் பேராசிரியராகவும் இருக்கிறார்.
நிதிஷ் நாயக்
நிதிஷ் நாயக்
நிதிஷ்
நாயக், எய்ம்ஸ் மருத்துவமனையின் இருதய நோய் நிபுணர். குறிப்பாக இவர்,
இதயக் குழாய் நோய் தொடர்பாக நிபுணத்துவம் பெற்றவர். முன்னாள் பிரதமர்
மன்மோகன் சிங்குக்கு 2009-ல் இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்தவர்.
2013-ல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டபோது
சிகிச்சை செய்தவர். அதே வருடம், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாகக்
கைதுசெய்யப்பட்ட அப்துல் கரீம் துண்டாவுக்குத் திடீர் இதய வலி ஏற்பட்ட
நிலையில் செயற்கை இருதயம் பொருத்தி அறுவைச் சிகிச்சை செய்தவர். மத்திய
அரசின் பத்மÿ விருது, 2014-ல் இவருக்கு வழங்கப் பட்டது.
அஞ்சன் த்ரிகா
அஞ்சன் த்ரிகா
மயக்கவியல்,
இதயம் சார்ந்த மயக்கவியல் மற்றும் மின் உடலியங்கியல், அதாவது உடலின் மற்ற
உறுப்புகளில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள்
குறித்தான நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர் த்ரிகா. அதிதீவிரச் சிகிச்சைப்
பிரிவில் இருக்கும் அறுவைச் சிகிச்சை நோயாளிகளுக்கு மயக்க மருந்து தருவதில்
வல்லுநர்.
ஜி.சி. கில்நானி
நுரையீரல் மற்றும் தூக்கவியல் சிகிச்சை நிபுணரான கில்நானி, காசநோய் தொடர்பாக பல்வேறு அளவிலான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டபோது, நுரையீரல் அறுவைச்சிகிச்சை செய்தவர் கில்நானி. செயற்கை சுவாசக் கருவியைப் பொருத்துவது, அதை பொருத்தியபின் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளைச் சரிசெய்வது உள்ளிட்டவற்றில் நிபுணர் டாக்டர் கில்நானி.
டாக்டர் கௌசிக் முத்து ராஜா
இளம் மருத்துவரான கௌசிக் நெஞ்சக நோய்க்கான தேசியக் கல்லூரியின் இளம் விஞ்ஞானி பட்டத்தை பெற்றவர். நுரையீரல் நோய் மருத்துவப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். ராமச்சந்திரா மருத்துவ மனையின் நெஞ்சக நோய் மற்றும் காசநோய் மற்றும் தூக்கவியல் மருந்துகளுக்கான பிரிவில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். மேலும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவ நிபுணர்கள் பட்டியலில் உலகில் தலை சிறந்தவர்கள் யார் என தேர்வு செய்வதும் இவர்தான். டாக்டர் ரிச்சர்ட்டை லண்டனிலிருந்து சென்னைக்கு வரவழைத்ததும் இவரது பரிந்துரையின் பேரில்தான் எனக் கூறப்படுகிறது

டாக்டர்
பாமா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட ஸ்பெஷலிஸ்ட் டுகளின் ஆலோசனை,
அவ்வப்போது பெறப்படுகின்றன. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர்
சிவகுமார், டாக்டர் ராஜ மாதங்கி, டாக்டர் விக்ரம் ஆகியோரும் உடன் இருந்து
தங்கள் பங்குக்குக் கவனித்துக் கொள்கிறார்கள். சிங்கப்பூர்
மருத்துவமனையில் இருந்து இரண்டு பிசியோதெரப்பிஸ்ட்டுகள் வந்து
சென்றுள்ளார்கள்.
இந்த வகையில் பார்த்தால், சுமார் 27 டாக்டர்களின் கண்காணிப்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கிறார்!

- ஐஷ்வர்யா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தே.அசோக்குமார்
24/7 ஐவர் படை!
ஸ்பெஷலிஸ்ட்டுகள் தவிர்த்து முதல்வரைச் சுற்றி 24 மணிநேரமும் இயங்கும் ஐவர் மருத்துவப் படை இது.
ராமசுப்ரமணியம்

ஜெயலலிதாவின்
உடல்நிலையைக் கண்காணிக்கும் மருத்துவக் குழு, இவர் தலைமையில்தான்
இயங்கிவருகிறது. தொற்றுநோய் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர்
புகழ்பெற்ற மருத்துவ இருக்கையான லண்டன் ராயல் காலேஜ் ஆஃப் பிசீஷியன்ஸின்
அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர். கடந்த 20 வருடங்களாக அப்போலோவின்
தொற்றுநோய்ப்பிரிவின் மருத்துவ ஆலோசகராக இயங்கிவருகிறார். 2006 வரை
சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பேராசிரியராகவும்
பணியாற்றி இருக்கிறார். தற்போது, அப்போலோவின் தொற்று நோய்ப்பிரிவின் தலைமை
மருத்துவ ஆலோசகராக இருக்கும் இவர், தொற்றுநோய் ஆராய்ச்சி தொடர்பாக பல்வேறு
ஆய்வு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அவற்றில் நிமோனியா தொற்றுப்
பராமரிப்பு, தென்னிந்தியப் பெண்களின் நுரையீரல் செயல்பாடுகள், நோய்க்
கொல்லிகளாலும் குணப்படுத்த முடியாத தொற்றுகள் மேலாண்மை, நாட்பட்ட காய்ச்சல், முதியோர்களில் எதிர்ப்புசக்தி மற்றும் அதன் மேலாண்மை உள்ளிட்டவை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அடங்கும். இவை தவிர, லண்டன் நெஞ்சக மருத்துவமனையின் நெஞ்சுக்குழாய் நோய்ப் படிப்பு பேராசிரியராகவும், இந்தியாவின் தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
ரமேஷ் வெங்கட்ராமன்
தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணரான டாக்டர் ரமேஷ், அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க நெஞ்சக மருத்துவக் கூட்டமைப்பின்
உறுப்பினராகவும் இருக்கிறார். நெஞ்சக நோய்ப் பிரிவுக்கு என மிகப்பெரிய அளவில் இயங்கிவரும் புகழ்பெற்ற பீட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அப்போலோவின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவ ஆலோசகராக பணியாற்றிவரும் டாக்டர் ரமேஷ், ஸ்டிமுலேட்டர் வகை மருத்துவப் பயிற்சியில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்டிமுலேட்டர் என்பது குறிப்பாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் நோயாளிகளின் உறுப்பு சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது மற்றும் அந்தச் செயல்பாடுகள் சார்ந்து சிகிச்சை அளிப்பது.
செந்தில்குமார்

நாக்பூர்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவர் பட்டம்
பெற்றவர். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல்
துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது, அப்போலோவின் அதிதீவிரச்
சிகிச்சைப்பிரிவு மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
பாபு கே ஆபிரகாம்
மணிப்பாலின் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவக் கல்லூரியில் படித்து, மருந்துகளுக்கான நிபுணத்துவம் பெற்றவர். லண்டன் ராயல் காலேஜ் ஆஃப்
ஃபிசீஷியன்ஸின் உறுப்பினரான இவர், நுரையீரல் நோய் சிகிச்சை மற்றும் தீவிரச் சிகிச்சைப்பிரிவில் நிபுணத்துவம் உள்ளவர். கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தீவிரச் சிகிச்சைப்பிரிவு மருத்துவமுறையில் பயிற்சி பெற்றவர். தற்போது, அப்போலோவின் நுரையீரல் நோய்ப் பிரிவு மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
என்.ராமகிருஷ்ணன்
உடலியல் உட்புற மருந்து, தீவிரச் சிகிச்சை மருந்து, தூக்கம் தொடர்பான நோய்கள் சார்ந்த சிகிச்சை முறை ஆகியவற்றில் நிபுணர். தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், தீவிர சிகிச்சை மருத்துவத்தில் 15 ஆண்டுகளும், தூக்கவியல் சிகிச்சையில் 10 ஆண்டுகளும் அனுபவம் உள்ளவர். பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய மருத்துவக் கூட்டமைப்புகளின் உறுப்பினராகவும் இருக்கிறார். டாக்டர் ரமேஷ், டாக்டர் பாபு ஆபிரகாம் மற்றும் டாக்டர் செந்தில்குமாருடன் இணைந்து இண்டெலி ஐ.சி.யு என்னும் புதுவகையான ஆன்லைன் தீவிரச் சிகிச்சை மருத்துவ முறையை தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர். அப்போலோவின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ ஆலோசகராகவும் இருக்கிறார்.

சிங்கப்பூரிலிருந்து
இரண்டு பெண் பிஸியோதெரப்பி நிபுணர்கள் முதல்வரின் சிகிச்சைக்காக
வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா ஷர்மா.
இவர், யோகாவில் நிபுணத்துவம் பெற்றவர். கென்யாவைத் தலைமையிடமாகக் கொண்டு
யோகா பள்ளியை நடத்திவரும் இவர், பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடிய சர்வதேச
யோகா தினத்தில் கென்யா நாட்டின் சார்பாகப் பங்கேற்றவர். மேலும், உடல்
தசைகளை தளர்வு செய்வதற்கான ‘சிகிச்சை யோகா முறை’(therapeutic yoga)
மூச்சுப் பயிற்சி ஆகியவற்றில் சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்றவர்.
இன்னொருவர், சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் மேரி. இவர், நரம்பியல் சார்ந்த உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர். விகடன்,காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக