வெள்ளி, 7 அக்டோபர், 2016

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

 சென்னை:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைரத்து செய்யப்பட்டதை
எதிர்த்து, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. விசாரணையை, 18ம் தேதிக்கு, தள்ளிவைத்து உள்ளது. தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பா ணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, டிசம்பருக் குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட் டார். இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது.மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளதாவது:
வேட்புமனுக்கள் பரிசீலனை என, தேர்தல் நட வடிக்கைகள் தொடரும் போது, அதில் குறுக்கிட முடியாது. தனி நீதிபதியின் உத்தரவால், தேர்தல் நடவடிக்கைகள் நின்றுள்ளன. ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறை தேர்தல் நட க்க வேண்டும் என்பதால், அக்., 24க்கு முன், தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

'மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என,இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், காலையில் கோரப்பட்டது; அதற்கு, நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதை யடுத்து, பிற்பகலில் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, உள்ளாட்சி தேர்தல்
தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, நீதிபதிகள் காட்டினர்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்றஉத்தரவை பார்த்த தாக தெரிவித்தார்.

பின், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு பற்றி, மாநில தேர்தல் ஆணையத்தின் மூத்த வழக்கறிஞர் விவரித்தார். உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளதால், தேர்தல் நடவடிக்கை களை நிறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

தி.மு.க., அமைப்பு செயலர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையமே, தேர்தல் நடவடிக்கை களை நிறுத்தி விட்டது; புதிதாக தான், அறிவிப் பாணை வெளியிட வேண்டும்; இவ்வழக்கில் விரி வாக வாதங்கள் செய்ய வேண்டும்; எனவே, விசாரணைக்கு தேதி குறிப்பிடுங்கள்,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள், 'தேர்தல் நடவடிக்கை
களின் சங்கிலி தொடர் முறிந்து விட்டது; தேர்தல் அறிவிப்பாணை ரத்தாகி விட்டது; இனிமேல், புதி தாக தான் அறிவிப்பாணையை, தேர்தல் ஆணை யம் வெளியிட வேண்டும். உச்ச நீதிமன்றமும், தேர்தல் வழக்கை, 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள் ளது. இந்த வழக்கையும், 18ம் தேதி அன்று விசாரிக் கலாம்' என்றனர். விசாரணையை, 18ம்தேதிக்கு, தள்ளிவைத்தனர்.

நடத்தை விதிகள் ரத்து

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் அறிவித் துள்ளது.மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பு: உள்ளாட்சி தேர்தலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால்,தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக விலக்கி கொள்ளபடுகின்றன. மாநில தேர்தல் கமிஷனர், சீதாராமன் இதை தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றம் செல்ல முடிவா

''வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப் படும்,'' என, மாநில தேர்தல் கமிஷனர் சீதாராமன் கூறினார். அவர் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதை, உயர் நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப் படுமா என்பது குறித்து,இப்போது கருத்து சொல்ல முடியாது. உயர் நீதிமன்றத் தில், 18ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரு கிறது.

அதை எதிர்கொள் வதற்கு தேவை யான ஏற்பாடு களை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, வக்கீல் களுடன் ஆலோசித்து முடி வெடுக்கப்படும்.

இவ்வாறு சீதாராமன் கூறினார்  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக