வெள்ளி, 28 அக்டோபர், 2016

சசிகலா பன்னீர்செல்வம் மோதலால் மோடி கும்பலின் பினாமியான ஆட்சி .. இதுதான் சு.சாமி சொன்ன மெடிகல் மிராக்கில் .. பாஜகவுக்கு அடித்த ஜாக்பாட் !


சென்னை : ஓ.பி.எஸ்-சசிகலா
மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இறுதியில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது குறித்து தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்புகளை உருவாகியுள்ளது. இதனால் பலர் சூதாட்டத்திலும் பணம் கட்டியுள்ளனர். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனால் அறிமுகமாகி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா மூலம் அமைச்சரானவர். கட்சிக்கு வந்தவுடன் இவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வர் பதவி இழந்தபோது திடீரென ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. சசிகலா டி.டி.வி.தினகரனை முதல்வராக்க பார்த்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டதால் சசிகலா அதிர்ச்சியானார்.
முதல்வர் பதவி வழங்கப்பட்டதால் ஓ.பன்னீர் செல்வம் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்தார். ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்கி அவரின் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழ தொடங்கினார்.


ஒரு கட்டத்தில் தேனி தொகுதி எம்பியாக இருந்த டி.டி.வி.தினகரனுக்கும் வக்கீல் ஜோதிக்கும் இடையே டெல்லியில் வைத்து தகராறு ஏற்பட்டது. வக்கீல் ஜோதியின் வழியாக இது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்புலத்தில் பன்னீர்செல்வம் இருந்தார். இதையடுத்து டி.டி.வி.தினகரன் ஓரம் கட்டப்பட்டார். மேலும் தனக்கு எதிராக இருந்த, சசிகலாவின் தீவிர ஆதரவாளர் தங்க தமிழ் செல்வனையும் பன்னீர் செல்வம் காலி செய்தார். ெஜயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்ததால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சியில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. நிதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இதனால், ஜெயலலிதாவின் அடுத்த நிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் உயர்ந்தார். கட்சிக்கு நிதியை வசூல் செய்வது, கட்சி பிரச்னைகளை தீர்ப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.

ஓ.பன்னீர் செல்வத்தை 2வது முறையாக முதல்வர் ஆக்கியது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தால் சசிகலாவை, பன்னீர் செல்வம் ஓரம் கட்டினார். தினகரனை முதல்வர் ஆக்க முயற்சியில் ஈடுபட்டதால் சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார். அண்மையில் சென்னையில் நடந்த பொதுக்குழுவுக்கு சசிகலாவை முதல்வர் அழைத்து வரவில்லை. பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிராக பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோரை தூண்டிவிட்டு ஒ.பன்னீர் செல்வம் பேசவைத்தார். அதன் பின்னர் சசிகலாவால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சசிகலாவிடம் எதுவும் பேசாமல் ஜெயலலிதாவிடம் நேரடியாக பேச ஆரம்பித்தார். தொடர்ந்து சசிகலாவை ஓ.பன்னீர் செல்வம் புறக்கணிக்க ஆரம்பித்தார். மேலும், தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களை தனக்கு கீழே உருவாக்கி அவர்களுக்கு உதவ ஆரம்பித்தார். தனக்கு என்று கட்சியில் ஒரு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி கொண்டார். அதிமுகவிலும் அசைக்க முடியாத சக்தியாகவும் ஓ.பன்னீர் செல்வம் வலம் வந்தார்.

ஓ.பன்னீர் செல்வம் கேரளாவில் வாங்கியுள்ள சொத்துக்கள் தொடர்பாக கேரள முதல்வர், ஜெயலலிதாவுக்கு ஒரு அறிக்கை தயார் செய்து அனுப்பினார். முதல்வர் அலுவலகத்துக்கு சென்ற அந்த பைல் ஜெயலலிதா கைக்கு செல்லாமல் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் கைக்கே வந்தது. அந்த அளவுக்கு முதல்வர் அலுவலகத்திலும், கட்சி அலுவலகத்திலும் தனக்ெகன்று ஆட்களை நியமித்து ெதளிவாக காய் நகர்த்தி வந்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு அடுத்த நிலையில் இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு அதானி குழுமம் மூலம் வில்லங்கம் ஏற்பட்டது. ஆனால், நத்தம் விஸ்வநாதன் தப்பித்தார். அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் காய்நகர்த்தி வந்தார். அதானி குழுமம் மூலம் நத்தத்துக்கு   பெரிய அளவில் பணம் கைமாறியதாக தெரிகிறது. இது முதல்வர் கவனத்துக்கு சென்றது. முதல்வர் நேரடியாக கூப்பிட்டு நத்தம் விஸ்வநாதனை திட்டினார். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் குறித்து சசிகலாவிடம் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ஐவர் அணியினர் குறித்த தகவல்களை சேகரிக்க சசிகலா உத்தரவிட்டார். ஐவர் அணி என்ன எல்லாம் செய்கிறார்கள் என்ற தகவல் சேகரிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது. இதில், ஐவர் அணியில் இடம் பெற்றிருந்த வைத்தியலிங்கம் மட்டும் தப்பித்தார். தொடர்ந்து தனித்தனியாக கட்சி பெயரை சொல்லி கொள்ளை அடிக்க தொடங்கினர். நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர் செல்வத்தை விட சீனியர் என்றாலும், முதல்வருக்கு அடுத்த நிலையில் இருந்ததால் பன்னீர் செல்வத்தை தனது குருவாக நத்தம் விஸ்வநாதன் நினைத்து செயல்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் தனக்கு ஆதவாளர்களை எம்எல்ஏக்களாக்க ஒரு பட்டியலையும் தயார் செய்தார். ஐவர் குழுவில் இருந்த மற்றொரு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கு மண்டலத்தை தனக்கு என்று ஆக்கி கொண்டார். அதாவது, தர்மபுரியில் இருந்து கோவை வரை ஒரு முதல்வர் போலவே செயல்பட்டார். இந்த மண்டலத்திலும் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவரே முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார். மேலும், தன்னை இளவரசிக்கு நெருக்கமானவர் போலக் காட்டிக் கொண்டார்.

மேலும், இவர் தான் அமைச்சர்களிடம் கட்சி நிதியை வசூலித்து கார்டனுக்கு கொண்டு போய் வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை வைத்து தன்னை அசைக்க முடியாத சக்தியாக நினைத்து வலம் வந்தார். மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, செங்கோட்டையனை வளரவிடவில்லை. இந்த நிலையில் ஐவர் அணியில் இடம் பெற்றிருந்த வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி தவிர 3 பேரையும் முதல்வர் ஜெயலலிதா ஒரம் கட்டினார். வேட்பாளர் நேர்காணலில் கூட இவர்களை அழைக்கவில்லை. சில தினங்களுக்கு முன்னர் ஒ.பன்னீர் ெசல்வத்தின் ஆதரவாளர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதில் ஓ.பி.எஸ்சுக்கும் ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுவில்லை என்றால் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களை ஒன்று திரட்டி அதிமுகவினரை தோற்கடிக்கவும், சுயேட்சையாக வேட்பாளர்களை களம இறக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஒ.பன்னீர் செல்வத்துடன், பதவி இழந்த சில அமைச்சர்களும் சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா சசிகலா பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படுகிறார். கட்சிக்கும், சசிகலாவுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும். முதல்வர் சொன்னபடிதான் நடந்தார். தற்போது ஓ.பி.எஸ்.செய்தது தப்பு என்றால், அது ஜெயலலிதா செய்த தப்பாகத்தான் கருத வேண்டும். அண்ணன் மீது எந்த தவறும் இல்லை என்று ஒ.பன்னீர் செல்வத்தின்  ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த விளையாட்டில் கடைசியில் ஜெயிக்க போவது ஓ.பன்னீர் செல்வமா அல்லது சசிகலாவா என்ற பரபரப்பு கட்சினரிடையே தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொண்டர்கள் பணம் கட்டி சூதாட்டத்திலும் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
 தினகரன்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக