வியாழன், 13 அக்டோபர், 2016

கலைஞர் : காவிரி ... ரயில் மறியல் போராட்டத்துக்கு திமுக ஆதவரவு!

சென்னை : காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில், வரும் அக்டோபர் மாதம் 17, 18 ஆகிய நாட்களில் 48 மணி நேரம் தொடர் ரயில் பாதை மறியல் போராட்டம் நடத்துவதாகவும், அதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவும், பங்கேற்பும் கேட்டு கொடுத்துள்ள கடிதத்தினை ஏற்று, அவர்கள் நடத்தும் ரெயில் பாதை மறியல் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தோழர்களும், மாவட்ட செயலாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக