ஞாயிறு, 2 அக்டோபர், 2016

ராம்குமார் உடலில் 6 இடங்களில் காயம்.. எப்படி வந்தது?.. ஹைதராபாத்தில் ஆய்வு

Rankumar body samples sent to Hyderabad lab சென்னை: ராம்குமார் உடலில் ஏற்பட்டிருந்த 6 காயங்கள் எப்படி வந்தன என்பது குறித்து ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்படவுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டவர் சுவாதி. இவரைக் கொன்றதாக கூறி நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் திடீர் மரணமடைந்தார். அவர் மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறினர்.ஆனால் இதில் மர்மம் இருப்பதாக ராம்குமார் குடும்பத்தினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், மற்றவர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பெரும் தாமதத்திற்குப் பின்னர் ராம்குமாரின் உடலில் நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ராம்குமாரின் உடலில் 6 இடங்களில் காயம் உள்ளது தெரிய வந்துள்ளது. அந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டன, மின்சாரம் தாக்கி ஏற்பட்டவையா என்பது தெரியவில்லை. இந்த இடத்திலிருந்து தற்போது தசையை எடுத்துள்ளனர். இந்த மாதிரியானது, ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அ்ங்கு இவை ஆய்வு செய்யப்பட்டு இந்தக் காயம் எப்படி ஏற்பட்டதுஎன்பது கண்டுபிடிக்ப்படும். இந்த முடிவு தெரிய 15 நாட்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை தொடர்பான வீடியோவை கோர்ட்டில் போலீஸார் தாக்கல் செய்யவுள்ளனர்.     tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக