வியாழன், 13 அக்டோபர், 2016

அமித்ஷா ,அருண் ஜெட்லி முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தார்கள்.. 570 கோடி காண்டேயினர்கள் ஞாபகத்தில் இருக்கான்னு செக் பண்றாய்ங்க?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க
வந்த அமித்ஷா, அருண்ஜெட்லி பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் சென்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அதிக நாட்கள் ,மருத்துவமனியில் இருக்க வேண்டும் என்பதால் அவரது இலாகாக்கள் ஓ.பன்னீர்செலவம் வசம் ஒப்படைக்கப்பட்டது. இலாகா இல்லாத முதல்வர் ஆனார் ஜெயலலிதா முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருந்தபோது அவரது உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் கிளப்பி விடப்பட்டன. அப்போது முதன்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் நேரில் மருத்துவமனைக்கு வந்து பார்த்து பேட்டி அளித்தார்.

அதை தொடர்ந்து பல அரசியல் கட்சித்தலைவர்கள் குறிப்பாக ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆகியோர் சென்று பார்த்து பேட்டியளித்தனர். அதிமுகவுக்கு நெருக்கமான பாஜக தலைவர்கள் யாரும் வராததும் , பாஜக அதிமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமியின் சர்ச்சை பேச்சும் அதை தொடர்ந்து கவர்னர் அழைத்து பேசியதும் விமர்சனமானது. ஆனால் சு.சுவாமியின் பேச்சை தமிழிசை, பொன்னார், இல.கணேசன் உள்ளிடோர் மறுத்தனர். மருத்துவமனைக்கு நேரடியாக வந்து பார்த்துவிட்டு கவர்னரை சந்தித்த மத்திய அமைச்சர் அனைவருக்கும் சேர்த்து முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசி பதிலளித்தார்.


இந்நிலையில் முதல்வருக்கு நெருக்கமான பிரதமர் அப்போலோ வராலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வர இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், முதல்வரின் நெருங்கிய நண்பர் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் சென்னை வர உள்ளதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மதியம் சென்னை வந்த அமித்ஷா, அருண் ஜெட்லி இருவரும் மதியம் 1-30 மணி அளவில் அப்பொலோ மருத்துவமனைக்கு வந்தனர். இருவரும் ஒரே காரில் அப்போலோவுக்கு வந்தனர்.
பின்னர் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தனர் , செய்தியாளர்கள் யாரையும் சந்திக்காமல் புறப்பட்டு சென்றனர். அமித்ஷாவின் பாதுகாப்பு கருதி சந்திக்காமல் சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் சந்திப்பு குறித்து பின்னர் அறிக்கை வரும் என தெரிகிறது. இலக்கியா ,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக