ஒரே நாளில் இந்தியாவின் 5 முன்னணி வங்கிகளின் 32 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புக் குறைபாடு மற்றும் மால்வேர் தாக்குதல் காரணமாகவே இத்தனை லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஸ்டேட்
பாங்க் ஆஃப் இந்தியா, எச்.டி.எப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி,
யெஸ் வங்கி போன்றவற்றின் டெபிட் கார்டுகள்தான் அதிக அளவில்
பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்திட்ட 26 இலட்சம் டெபிட் கார்டுகள்
விசா, மாஸ்டர்கார்டு வகையை சார்ந்தவை. மற்றவை ரூபே கார்டுகள் என ரிசர்வ்
வங்கி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையங்களின் பரிவர்த்தனைகளில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் நேற்று ஒரே தினத்தில் 6.26 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டதை வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விரைவில் அவர்களுக்கு புதிதாக ஏடிஎம் டெபிட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து இயங்கும் சில விஷமிகளின் வேலை இது எனத் தெரிய வந்துள்ளது. tamiloneindia.com
பாதுகாப்புக் குறைபாடு மற்றும் மால்வேர் தாக்குதல் காரணமாகவே இத்தனை லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள பல பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையங்களின் பரிவர்த்தனைகளில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் நேற்று ஒரே தினத்தில் 6.26 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டதை வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விரைவில் அவர்களுக்கு புதிதாக ஏடிஎம் டெபிட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து இயங்கும் சில விஷமிகளின் வேலை இது எனத் தெரிய வந்துள்ளது. tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக