ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பறிமுதல் செய்யப்பட்ட 450 பேருந்துகளை உயர்நீதிமன்றம் விடுவித்தது .. தீபாவளிக்காக ..

சென்னை:விபத்து இழப்பீடு வழங்காததால், ஜப்தி செய்யப்பட்ட, 450 அரசு பஸ்களை, தீபாவளியை ஒட்டி உடனடியாக விடுவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக பஸ்கள், விபத்துகளில் சிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடு கேட்டு, மோட்டார் வாகன விபத்து வழக்கு நீதி மன்றங்களில் வழக்குகள் தொடர்வர். அவற்றை விசாரிக்கும் நீதிபதிகள், உரிய இழப்பீடு வழங்கும்படி, போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிடுவது வழக்கம். உத்தரவுக்கு பிறகும், இழப்பீடு வழங்காமல் போக்குவரத்துக் கழகங்கள் இழுத்தடிப்பது உண்டு.


அதனால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி, மனுக்கள் தாக்கல் செய்வர். அப்போது, இழப்பீட்டுக்கு ஈடாக, பஸ்களை பறிமுதல் செய்ய, நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கும். உடனே, பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.>மனு தாக்கல்< ஜப்தி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்துக் கழக நிர்வாகங் கள் மேல்முறையீடு செய்யும். இவ்வாறு, பறி முதல் செய்யப்பட்ட, 450 பஸ்களை விடுவிக்கக் கோரி,தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில்,
போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன.

மனுக்களில், 'பஸ்களை முடக்கி வைத்திருப்ப தால், போக்கு வரத்துக் கழகங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. பஸ்கள் இயங்காததால், பயணி களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது; தற்போது, தீபாவளி பண்டிகை வருகிறது; பயணிகள் அதிகம் செல்வதால், அதிக பஸ்களை இயக்க வேண்டியுள் ளது' என, கூறப்பட்டது.

இழப்பீட்டுதொகை

இம்மனுக்களை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இழப்பீட்டு தொகையை, தவணை அடிப்படை யில் செலுத்தும்படி, போக்குவரத்துக் கழகங் களுக்கு நிபந்தனை விதித்து, பஸ்களை விடு விக்கும்படி, ஏற்கனவே இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது;

அதன்படி, பஸ்களும் விடுவிக்கப்பட்டன. போக்குவரத்துக் கழகங்களும், இழப்பீட்டுத் தொகையை செலுத்தின.அதன் மூலம், இழப்பீடு கோரியவர்கள், போக்குவரத்துக் கழகங்கள், பொது மக்களுக்கு பலன் கிடைத்தது. அதே போல், இந்த வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது. நிபந்தனை அடிப்படையில், பஸ்கள் அனைத்தையும், உடனடியாக விடுவிக்கும்படி
உத்தரவிடப்படுகிறது.

இழப்பீட்டுத் தொகையில், 25 சதவீதத்தை, நவ., 28க்குள் செலுத்த வேண்டும்; மீதித் தொகையை, 2017 ஏப்., 3க்குள் போக்குவரத்துக் கழகங்கள், மூன்று தவணையாக செலுத்த வேண்டும். முதல் தவணை செலுத்தியது குறித்து, நவ., 28க்குள், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.விசாரணை, நவ., 29க்கு தள்ளிவைக்கப் படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.>22,250 சிறப்பு பஸ்கள்!

தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் மூலமாக, ஒரு லட்சம் பேர், சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்று திரும்புவர். இதன் மூலம், இரண்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என, போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:


சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு, தினமும், 2,275 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்காக, அவற்றுடன் கூடுதலாக, 1,700 சிறப்பு பஸ்கள் வீதம், அக்., 26, 27, 28ம் தேதி களில், மொத்தம், 11 ஆயிரத்து, 225 பஸ்கள் இயக்கப்பட உள்ளன; இவற்றில், 1,210 பஸ்கள் முன்பதிவு வசதி உள்ளவை.

தீபாவளிக்கு பின், மீண்டும் அதே எண்ணிக்கை யிலான பஸ்கள், 29, 30, 31ல் இயக்கப்படும். தீபாவளி, சனிக்கிழமை வருவதால், ஊருக்கு முன்கூட்டியே செல்வர். அதனால், இரு நாட்களுக்கு தலா, 30 ஆயிரம் பேர்; தீபாவளிக்கு முந்தைய நாளில், 40 ஆயிரம் பேர் என, ஒரு லட்சம் பேர் பயணம் செய்வர்.

அவர்கள் மீண்டும், சென்னை திரும்ப வசதி யாக, அதே அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப் படும். அதன்படி, மொத்தம், 22 ஆயிரத்து, 250 பஸ்களில், இரண்டு லட்சம் பேர் பயணம் செய்வர்.

மேற்கண்ட சிறப்பு பஸ்களுடன், உயர் நீதிமன்றம் விடுவித்துள்ள, 450 பஸ்களும், தீபாவளிக்கு இயக்கப்படுவதால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.  தினமலர்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக