தமிழகத்தில் பல கோடி ரூபாய்
மதிப்புள்ள கோயில் சிலைகள் திருடப்பட்டது இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள தொழிலதிபர் தீனதயாளின் வீடு, கலைக்கூடம், கிடங்கு ஆகியவற்றில், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், கடந்த ஏப்ரல் மாதம் திடீர் சோதனை செய்தனர்.
அதில் அங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடி வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கற்சிலைகள், 52 உலோகச் சிலைகள், 200-க்கும் மேற்பட்ட பழங்கால ஓவியங்கள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். இந்த தீனதயாளன்(பார்ப்பான்) எப்படியாவது தப்பி விடுவான் என்று தோன்றுகிறது
போலீஸார் கைப்பற்றிய பெரும்பாலான சிலைகள் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகியப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருடப்பட்டவை என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அந்தக் கலைக்கூட உரிமையாளர் தீனதயாளனை போலீஸார் கைது செய்தனர். தீனதயாளனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்று வந்திருப்பது தெரியவந்தது.
இதற்காக அவர், பல திருட்டு கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
4 கூட்டாளிகள் கைது: இதையடுத்து போலீஸார், தீனதயாளன் கூட்டாளிகளை கைது செய்து வந்தனர். இதற்கிடையே தீனதயாளனுக்கு சிலைகளை திருடிக் கொடுத்த கும்பல் குறித்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.
இதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கனகராஜ் (62), தினகரன் (57), செல்வராஜ் (55), பெரியநாயகம் (55) ஆகியோர் தீனதயாளனுக்கு 70 சதவீத சிலைகளை திருடி விற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் முகாமிட்டிருந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், அவர்கள் 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
4 பேரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
கைது செய்யப்பட்ட 4 பேரும், தீனதயாளனுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் சிலைகளை திருடி, தீனதயாளன் மட்டுமன்றி மேலும் சிலரிடமும் பேரம் பேசி விற்றுள்ளனர்.
தங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக, காரைக்குடி பகுதியில் பழைய பொருள்களை வாங்கி விற்கும் கலைக்கூடம் நடத்துவதுபோல தொழில் செய்து வந்திருக்கின்றனர். புதிதாக சிலைகளை செய்தும் விற்று வந்திருக்கின்றனர்.
இருப்பினும் சிலைகளை திருடி விற்று வந்ததன் மூலம் அவர்களுக்கு அதிக லாபம் கிடைத்திருக்கிறது.
இதில் கிடைத்த லாபத்தினால் 4 பேரும் அந்தப் பகுதியில் செல்வந்தர்களாக வலம் வந்திருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு கீழ் சிலரை கூலிக்கு வைத்துக் கொண்டு கோயில்களில் சிலைகளை திருடியிருக்கின்றனர்.
இவர்களில் தினகரன், பெரியநாயகம் ஆகிய இருவர் மீதும் ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்டம் பழவூரில் ரூ.15 கோடி மதிப்புள்ள சிலையை திருடிய வழக்கு உள்ளது.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் விசாரணைக்கு பின்னர் போலீஸார், எழும்பூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆஜர்படுத்துகின்றனர்.
உலோகச் சிலைகளுக்கு விலை அதிகம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கைது செய்யப்பட்ட கனகராஜ், தினகரன், செல்வராஜ், பெரியநாயகம் ஆகிய 4 பேரிடமிருந்தும் தீனதயாளன் கோயில் சிலைகளை பேரம் பேசியே வாங்கியிருக்கிறார்.
முக்கியமாக கற்சிலைகளுக்கு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரையிலும், உலோகச் சிலைகளுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரையிலும் விலை நிர்ணயம் செய்திருக்கிறார்.
சிலைகளின் கலைநுணுக்கம், அவற்றின் பழைமை, நீள, அகலம் ஆகியவற்றை பொருத்து தீனதயாளன் விலை நிர்ணயம் செய்ததாக 4 பேரும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். தினமணி.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக