வியாழன், 13 அக்டோபர், 2016

சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி (படங்கள் )

சென்னை கிண்டி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதியதில் மூன்று மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியான மாணவிகளின் பெயர் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்திரி என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்



சென்னை கிண்டியில் மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் சித்ரா, காயத்ரி, ஆயிஷா ஆகிய 3 மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதியதில் மூவரும் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 3 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.  இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து நாளை செல்லம்மாள் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக