செவ்வாய், 11 அக்டோபர், 2016

250 பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவல்!

மின்னம்பலம்,காம்  : காஷ்மீரில் பதுங்கி உள்ள சுமார் 250 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உரி பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து சர்ஜிக்கல் ஆபரேஷன் நடத்தியது. இதற்கு பழிவாங்கும் விதமாக காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் மூன்று பயங்கரவாத இயக்கங்களின் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான அழிவு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. சர்ஜிக்கல் ஆபரேஷனை இந்திய ராணுவம் முன்னெடுப்பதற்கு முன்னதாகவே இந்த பயங்கரவாதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் ஊடுருவி உள்ளனர் என்ற உளவுத்துறை தகவலை மேற்கொள்காட்டி உயர்மட்ட அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 250 பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என உளவுத்துறை கூறுகிறது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த இவர்களுக்கு தொடர்ச்சியாக அவர்களை கையாளுபவர்களிடம் இருந்து உத்தரவு வந்து கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதி உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இருப்பினும் பிராந்தியத்தில் நில அமைப்பின் காரணமாக சில பகுதிகளில் இடைவெளி காணப்படுகிறது என்றும் தகவல்கள் கூறி உள்ளன. எல்லையில் புதியதாக மேற்கொள்ளப்படும் பயங்கரவாத ஊடுருவல் முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக