புதன், 26 அக்டோபர், 2016

பிரித்தானிய கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு ரூ.18 கோடி நன்கொடை அளித்த லைக்கா அல்லிராஜா

பிரித்தானிய நாட்டின் பிரதமராக டேவிட் கமெரூன் இருந்தபோது அவருடைய கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு இலங்கையை சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய பிரதமராக டேவிட் கமெரூன் பதவி வகித்தபோது இலங்கையை சேர்ந்த லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன் அல்லிராஜா என்பவர் தான் இந்த நன்கொடையை அளித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்தபோது அந்நாட்டிற்கு அளித்துவந்த உதவிகளை பிரித்தானிய அரசு தற்காலிகமாக நிறுத்தியது.இந்நடவடிக்கைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு லைக்கா மொபைல் கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு நன்கொடை அளிக்க தொடங்கியுள்ளது.இந்த  பணத்தில்   தனது தாய்நாட்டுக்கு (இலங்கைக்கு) எவ்வளவோ  செய்திருக்கலாம் செய்யலையே?

இதற்கு பிறகு, இலங்கை நாட்டிற்கு பிரித்தானிய அரசு நிதியுதவிகளை அளிப்பதை மீண்டும் தொடர்ந்துள்ளது.முதன் முதலாக கடந்த 2011ம் ஆண்டு கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு லைக்கா மொபைல் 1,76,000 பவுண்ட் நன்கொடை அளித்தது.
இந்த நன்கொடையானது 2012ம் ஆண்டு 2,50,000 பவுண்டாக அதிகரித்துள்ளது. லைக்கா மொபைல் நன்கொடையை தொடர்ந்து இலங்கைக்கு பிரித்தானிய அரசு அறிவித்த நிதியுதவி தொகையும் 5.5 மில்லியன் பவுண்டாக அதிகரித்தது.
இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் லைக்கா மொபைல் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு சுமார் 1 மில்லியன் பவுண்ட்(17,97,22,477 இலங்கை ரூபாய்) தொகைக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இலங்கை அரசுக்கு பிரித்தானியா 6.6 மில்லியன் பவுண்ட் நிதியுதவி அளிக்கும் என்ற அறிவிப்பிற்கு முன்னதாகவே லைக்கா மொபைல் தனது நன்கொடையை அளித்துள்ளது.
w.dailymail.co.uk/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக