ஞாயிறு, 2 அக்டோபர், 2016

17,495 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் ஆணையம்!

நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 17,495 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 17,19ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நகர்புறத்தில் 28,761 வாக்குச்சாவடிகளும், ஊரகப் பகுதிகளில் 62,337 வாக்குச்சாவடிகளும் மற்றும் சென்னை மாவட்டம் உள்பட மொத்தம் 91,098 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் 17,495 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் வீடியோ மூலம் வாக்குப் பதிவைக் கண்காணிக்க ரூபாய் 3 கோடியே 37 லட்சத்து 41 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக