சனி, 22 அக்டோபர், 2016

14 மாநிலங்களைவிட அம்பானி பணக்காரர்! மாநிலங்களை விட சில தனி நபர்கள் பணக்காரர்கள் .. கொடுமை

உலகளவில் பணக்காரர் பட்டியலில் 32ஆவது இடத்திலும், இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 23.1 பில்லியன் டாலராகும். ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு வருடமும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது, இதில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதல் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி அளவை விட அதிகமாக உள்ளது.
இந்திய பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் திலிப் ஷங்க்வின் சொத்து மதிப்பு 15.8 பில்லியன் டாலராகும். இவரது சொத்து மதிப்பு கோவா, அருணாச்சலப்பிரதேசம் உள்பட 13 மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி அளவை விட அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 15.4 பில்லியன் டாலராகும். இது 13 மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி அளவை விட அதிகமாக உள்ளது.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக