செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ஓசூர் ரவுடி பசூரி (VHP) வெட்டி கொலை .. இந்த ரவுடி விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவராம்!

கிருஷ்ணகிரி: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஓசூர் நகர தலைவர் பசூரி, மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் ஓசூர் நகர தலைவராக இருந்தார் பசூரி. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள நேரு நகர் என்ற இடத்தில் இன்று மர்மநபர்களால் சூரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரியை வெட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு இந்து இளைஞர் எழுச்சி பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பு  கோரிக்கை விடுத்துள்ளது. tamiloneinida.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக