வெள்ளி, 2 செப்டம்பர், 2016

Mr.Reliance மோடி..... மிஸ்டர்.ரிலையன்ஸ் என்று மோடியை டிவிட்டரில் அழைத்த கெஜ்ரிவால்

டெல்லி: பிரதமர் மோடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மிஸ்டர். ரிலையன்ஸ் என்று டிவிட்டரில் குறிப்பிட்டது சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது. நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இணைய சேவையை நேற்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தினார். இதுதொடர்பான விளம்பரங்களில், பிரதமர் மோடியின் புகைப்படம் பதிக்கப்பட்டு, மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவிற்கான நுழைவாயில் ஜியோ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியை மிஸ்டர். ரிலையன்ஸ் என்று டிவிட் செய்து இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து விளம்பர மாடலாக இருங்கள் என்றும், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் 2019-ல் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டார்.  தினகரன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக