சனி, 17 செப்டம்பர், 2016

சுவாதி கொலை... பைக்கில் தப்பி சென்ற இருவர் மீது விசாரணை....

விகடன்.காம் மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கின் சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. ' படுகொலையான அன்று பைக்கில் வந்த இரண்டு பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடக்கத்தில் இருந்தே, ' ராம்குமார் குற்றவாளியில்லை; உண்மைக் குற்றவாளிகளை போலீஸ் தப்பவிட்டுவிட்டது என்பன போன்ற தகவல்கள் வெளியாகின. சிறையில் இருக்கும் ராம்குமாரிடம் போலீஸ் விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அரசுத் தரப்பில் வழக்கை விசாரித்து வந்த கொளஞ்சிநாதன் என்பவர் மாற்றப்பட்டு, தற்போது கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கின் விசாரணைக்காக, கூடுதல் ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர் போலீஸார். இந்நிலையில், ' ராம்குமாருக்காக ஆஜராவதில் இருந்து வழக்கறிஞர் ராமராஜ் விலகிவிட்டார்' என்பன போன்ற செய்திகள், ஃபேஸ்புக் பதிவர் தமிழச்சி மூலம் பரப்பப்பட்டது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ராமராஜ், " இந்த வழக்கில் ராம்குமாருக்காக ஆஜராவதோடு மட்டுமல்லாமல், ஒரு வழக்கை காவல்துறை எப்படிக் கையாள வேண்டும் என்ற அடிப்படையிலும் செயல்பட்டு வருகிறேன். எங்களுக்கு ஒத்துழைப்பு தராவிட்டாலும் பரவாயில்லை. ' வழக்கில் இருந்து விலகிவிட்டேன்' என்றெல்லாம் தமிழச்சி என்பவர் அவதூறு பரப்புகிறார். இந்த நிமிடம் வரையில் ராம்குமாருக்காக நான் ஆஜராகி வருகிறேன். வருகிற திங்கள்கிழமை அவருடைய ஜாமீன்மனு மீதான விசாரணை நடக்க இருக்கிறது. என்னுடைய நேர்மையைப் பற்றி தமிழச்சி போன்றவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
ராம்குமாரை மையமாக வைத்து அரசியல் செய்கின்றனர். சுவாதி போஸ்ட்மார்ட்டம் அறிக்கையைக் கேட்க இருக்கிறோம். தடயவியல் நிபுணர்களின் விசாரித்தால், படுகொலையின் தன்மை பற்றி துல்லியமான சில விவரங்கள் கிடைக்கலாம். தனி ஒருவரால் இந்தளவுக்கு அரிவாளால் வெட்ட முடியாது என்பதுதான் உண்மை. அண்மையில் ராம்குமாரை சிறையில் சந்தித்துப் பேசினேன். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். இந்தப் படுகொலை அவரால் நிகழ்த்தப்படவில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். சிறையில் இருந்து ராம்குமார் வெளியில் வந்தால் மட்டுமே, வழக்கு தொடர்பான பல விஷயங்கள் வெளி உலகிற்குத் தெரியவரும்" என்றார். 
" நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலைச் சம்பவம் முடிந்த பிறகு, பைக்கில் தப்பிச் சென்ற இரண்டு பேரிடம் காவல்துறை விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, பல ஆதாரங்களை போலீஸார் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த விவகாரத்தில் கோட்டைவிட்டு விட்டால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு வருகின்றனர். பைக்கில் தப்பிச் சென்ற அந்த இருவர் யார் என்ற மர்மத்தை போலீஸ் அவிழ்க்குமா?" எனக் கேள்வி எழுப்புகின்றனர் சில வழக்கறிஞர்கள். 
' சுவாதியின் லேப்டாப்பில் இருந்து நாட்டின் ரகசியங்கள் கசியவிடப்பட்டதாக' சில தகவல்கள் வெளியாக, வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரித்துவிட்டுச் சென்றுள்ளனர் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள்


நக்கீரன்.இன்  சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது சுவாதி படுகொலையான அன்று பைக்கில் வந்த 2 பேரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.சுவாதியை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி வாலிபர் கொலை செய்தான் என கூறி காவல்துறை கைது செய்தனர். அவன் தான் கொலை செய்தான், எதற்காக கொலை செய்தான் உள்ளிட்டவை தனது வாக்குமூலத்தை காவல்துறையின் விசாரணையின் போது கூறியதாக செய்திகள் வெளியாகின.ஆனால், ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் இந்த கொலையை ராம்குமார் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தமிழச்சி என்பவர் தொடர்ந்து ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை எனவும் கூறி வருகிறார்.

யார் கொலையை செய்தார் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறிவருகிறார்.இந்நிலையில் அரசு தரப்பில் இந்த வழக்கை விசாரித்து வந்த கொளஞ்சிநாதன் மாற்றப்பட்டு, கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர், இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களை திரட்ட காவல்துறை தரப்பில் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.சுவாதி படுகொலை சம்பவம் நடந்து முடிந்த பின்னர் அன்று பைக்கில் தப்பிச் சென்ற இருவரிடமும் காவல்துறை தீவிரமாக விசாரணை நடந்தி வருவதாகவ தகவல்கள் வருகின்றன. புதிதாக இந்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருவதால் இந்த கொலை வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் நிகழலால் என கூறப்படுகிறது   வெப்துனியா.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக