வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பலுசிஸ்தான் தலைவருக்கு இந்திய குடியுரிமை வழங்க தீர்மானம்! புதிய யுத்த முனை திறக்கப்படுகிறது?


புதுடில்லி: பலுசிஸ்தான் போராட்ட குழுவின் தலைவருக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.மேலும், இது தொடர்பாக பலுசிஸ்தான் தலைவர் பிரஹூம்தாக் புக்டி, இந்திய அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் புக்டி, ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அடைக்கலம் கோருவார் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக போராட்டக்குழு நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. புக்டிக்கும், அவரது குழுவினருக்கும் குடியுரிமை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தலாய் லாமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் அளித்து, சீனாவுக்கு எதிராக உலகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்யும் வகையில் பாஸ்போர்ட் வழங்கியது போல், புக்டிக்கும் இந்தியா அடைக்கலம் அளிக்கும் எனக்கூறப்படுகிறது. இதன் மூலம் புக்டி, உலகில் உள்ள பல நாடுகளுக்கு சென்று பலுசிஸ்தான் பிரச்னை குறித்து எடுத்துரைக்க எளிதாக அமையும் எனக்கூறப்படுகிறது.


புக்டி தவிர அவரது நம்பிக்கைக்கு உரியவர்களான ஷெர் முகமது புக்டி மற்றும் அஜிஜூல்லா புக்டி ஆகியோருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலுசிஸ்தான் வாசிகள் ஆப்கனில் அடைக்கலம் கேட்டுள்ளனர். 2000க்கும் மேற்பட்டவர்கள் உலகின் பல நாடுகளில் வசிக்கின்றனர். வரும் செப்., 18 மற்றும் 19ம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் கூடும், பலுசிஸ்தான் போராட்ட குழு, புக்டிக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கேட்டு போராடிய புக்டியின் தாத்தா, அக்பர் புக்டி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவர் சுவிட்சர்லாந்து சென்றார். அவர் ஆப்கனிலும், சுவிட்சர்லாந்தும் மாறி மாறி வசித்து வருகிறார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக