புதன், 14 செப்டம்பர், 2016

வன்முறைக்கு எதிர்ப்பு:மாணவர்கள் போராட்டம்! கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான...


மின்னம்பலம்.காம்:  தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ள கர்நாடகாவைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்பையடுத்து கர்நாடக மாநிலத்தில் கவரங்கள் வெடித்தது. கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தொடர்ந்து கன்னட கலவரக்காரர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மற்றும் விவசாயிகள், வணிகர்கள் என அனைவரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழகமெங்கும், முழுஅடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம், முற்றுகைப் போராட்டம், மனித சங்கிலி போராட்டம் என கட்சித் தலைவர்களும் பல அமைப்பை சேர்ந்தவர்களும் நடத்த அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் தங்கள் பங்கிற்கு போராட்டத்த கையில் எடுத்துள்ளார்கள். திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக இளைஞரைத் தாக்கிய கன்னட கும்பலை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். இதேபோல் புதுவையிலும் போராட்டம் நடைபெற்றது. புதுவையில் இருந்து மும்பை செல்லும் ரயிலை சட்டக் கல்லூரி மாணவர்கள் மறித்து போராட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக