புதன், 28 செப்டம்பர், 2016

சார்க் மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா, ஆப்கான்ச்தான் , பங்காளதேசம், பூட்டான் ...

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டை இந்தியா, பங்களாதேஷ், ஆப்கான், பூட்டான் ஆகிய நாடுகள் புறக்கணிக்க இருக்கின்றன. பாகிஸ்தானுடன் செய்துகொண்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க முடிவெடுத்திருக்கும் இந்தியா, சார்க் மாநாட்டைப் புறக்கணிப்பதன்மூலம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு தன் எதிர்ப்பை பதிவுசெய்ய முடிவு செய்துள்ளது. காஷ்மீரின் எல்லைப் பகுதி மாவட்டமான பாரமுல்லாவில் அமைந்திருக்கும் பரந்து விரிந்த ராணுவ முகாமில் சில நட்களுக்குமுன் அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்தத் தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது என்ற அமைப்பு ஈடுபட்டதாக உளவுத்துறையும், ராணுவத் தளபதியும் கூறியநிலையில் பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பாகிஸ்தானை குற்றம் சுமத்தினார்கள். இந்தியா-பாகிஸ்தானுக்கிடையிலான முரண்பாடுகள் உச்சகட்டமாகக் கூர்மையடைந்துள்ளநிலையில், 19ஆவது சார்க் உச்சி மாநாடு வருகிற நவம்பர் 9, 10 தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க மோடி, பாகிஸ்தான் வருவார் என்பதாக பாகிஸ்தான் கூறிவந்தநிலையில், உரி முகாம்மீதான தாக்குதல் இரு நாட்டு உறவுகளுக்கிடையில் மேலும் கசப்பை உருவாக்கி இருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் பங்களாதேஷ், ஆப்கான், பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளாக உள்ளன. எல்லை கடந்த பயங்கரவாதத்தைக் கண்டித்து சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கிறது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை ஆதரித்து பங்களாதேஷ், ஆப்கான், பூட்டான் ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிக்கின்றன.   மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக