வெள்ளி, 16 செப்டம்பர், 2016

காவிகளின் நேரடி வழிகாட்டலில் அரங்கேறிய காவிரி கலவரங்கள் .. பெங்களூரு சாட்சிகள்

வெள்ளியன்றே பந்த் அறிவிக்கப்பட்டு விட்டது. நண்பர் ஒருவர் வீடு
திரும்புகையில் பந்த்தின்போது லாரி ஓட்டிக் கொண்டிருந்த லாரியோட்டியை சாலையில் இறக்கி விட்டு நண்பரின் கண் முன்னால் அடித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த லாரி டிரைவர் ஒரு கன்னடிகர்..
வெள்ளி முழுக்க தமிழர் கன்னடர் என்ற பாகுபாடு இல்லாமல் போட்டு அடித்திருக்கிறார்கள்..
நண்பர் பார்த்தவரை அடித்த கும்பல் வழக்கமாக அவர் சாலையில் பார்ப்பவர்கள் அல்லர். இதற்கென்று தனியாக தயார் செய்யப் பட்டு அழைத்து வரப் பட்டவர்கள்.. ஒவ்வொரு கும்பலை மேற்பார்வை பார்க்கவும் காவி தலைப்பாகையோடு ஒருவர் அங்கே இருந்திருக்கிறார்..

சேனல்கள் வெள்ளியன்று கன்னடர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை எல்லாம் மூச்சுக் காட்டாமல் மறைத்து விட்டன. மறுநாள் சனி முதல் நிகழ்த்தப்பட்ட தமிழர் மீதான வன்முறையை மட்டுமே ஊடகங்கள் பெரிதாக்கியுள்ளன..
அதே போல மற்ற நண்பர்களுடன் பேசியபோது பெங்களூருவில் உள்ள டெவலப்பர்ஸ் எனப்படும் ரியல் எஸ்டேட்காரர்களின் அலுவலகத்தில் பாஜகவின் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. இதன் காரணம் என்ன என்று தெரியவில்லை..
மொத்தத்தில் இந்த கலவரம் வன்முறை யாவும் state sponsored violence தான் என்பது என்னுடைய கருத்து..
பாஜக என்பது கொஞ்சமும் மக்கள் மீது பற்று கொண்ட கட்சி அல்ல.. அது கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி.. தனது பதவி வெறிக்காக பெங்களூரை கூறு போட்டு அடுத்த தேர்தல் வெற்றிக்கான அச்சாரத்தைப் போட்டுள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது..   முகநூல் பதிவு   பெங்களூரு சாட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக