ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

வாங்கிய பணத்தை ராம்ராஜ் திருப்பி கொடுக்கவேண்டும் : தமிழச்சி ஆவேசம்.. சுவாதி கொலை வழக்கில்

சுவாதி படுகொலை விசாரணை தொடர்பாகவும், அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க / இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் விடுத்த கொலை மிரட்டல்கள் ஆதாரங்கள் சேமிக்கப்பட்டு இதற்காக இந்திய சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க முயல்வது என்று ப்ரெஞ்ச் சட்ட ஆலோசகர்களுடன் விவாதித்து இந்திய வழக்கறிஞர்களிடம் தொடர்பு கொண்டுள்ளோம். இதற்காக கடந்த 1 வாரமாக கடும் முயற்சியில் இருந்ததால் சுவாதி தொடர்பான எந்த தகவல்களையும் இணையத்தில் பதிவிடுவதை தற்காலிகமாக தவிர்த்து வந்தேன். இன்று அணைத்து ஆவணங்கள், ஆதாரங்கள் ...சில இந்திய வழக்கறிஞர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அநேகமாக இன்னும் இரு தினங்களில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்திய வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின் அறிவிப்பார்கள்.

இந்திய வழக்கறிஞர்கள் என்ன காரணத்திற்கான எனது புகார் என்பதை எழுத்து வடிவிலும் காட்சி வடிவிலும் புகார் பதிவை இந்திய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதால் சில வீடியோ காட்சியும் எடுக்கப்பட்டது. அதில் இருந்து சில உங்கள் பார்வைக்காக... webdunia.com


ராம்குமார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராம்ராஜ் திடீரென வழக்கில் இருந்து விலகல். இதன் பின்னணி அரசியல் என்ன?
சுவாதி படுகொலை விசாரணையில் பொய் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காட்டப்பட்டுள்ள ராம்குமார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராம்ராஜ் திடீரென தான் வழக்கில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக ராம்குமார் பெற்றோரிடம் நேற்று அறிவித்து உள்ளார்.
அதற்கான காரணம் என்ன என்று அவருடைய பெற்றோர்கள் கேட்டதற்கு எந்த பதிலும் அளிக்காததோடு அதற்கு பிறகும் பலமுறை தொடர்பு கொண்டும் பதிலளிக்க மறுத்துள்ளார்.
'ராம்குமார் தான் குற்றவாளி' என்று தமிழக காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்த போது தோழர் திலீபன் மகேந்திரன் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் 12000 ரூபாய் (சரியான எண்ணிக்கை நினைவில்லை) சேகரித்து ராம்குமாருக்காக ஆஜராகும்படி கேட்டுக் கொண்டார்.
[ராம்குமார் பெற்றோர்கள் நிலை தடுமாறி சட்டப்படி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கூட அறியாத கிராமத்து மனிதர்கள். அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களுக்கும் உதவியவர்தான் தோழர் திலீபன் மகேந்திரன்]
இதற்கிடையே ஒரு குறிப்பிட்ட சாதி சங்கமும் ராம்குமாரை விடுவிக்க வழக்கறிஞர் ராம்ராஜிடம் 50.000 ரூபாய் தருவதாக கூறி முன்பணமாக 16.000 ரூபாய் கொடுத்துள்ளது.
ராம்குமார் பெற்றோரும் 20.000 ரூபாய் கொடுத்துள்ளார்கள். தோழர் திலீப்பனும் அவப்போது குறிப்பிட்ட தொகையை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் ராம்ராஜ் எதற்காக வழக்கில் ஆஜராக மறுக்கிறார் என்று கூறவேண்டும்.
ராம்குமார் வழக்கிற்காக மற்றவர்களிடம் எவ்வளவு தொகை பெற்றாரே அதை திருப்பி கொடுக்க வேண்டும். மறுத்தால், "இதுவும் ஒருவகை மோசடி" என்பதை உணர வைக்க வேண்டிய நிலைக்கு நம்மை உள்ளாக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
இதற்கு மேல் வழக்கில் ஆஜராக விருப்பமில்லை என்றால் வாங்கிய தொகையை கொடுக்க வேண்டும்.
"தான் நேர்மையான வழக்கறிஞர் என்று தன்னை தானே பாராட்டிக் கொள்ளும் அந்த குணத்திற்காகவாவது வழக்கறிஞர் ராம்ராஜ் இதுவரை ராம்குமார் வழக்கிற்காக பெற்றுக் கொண்ட தொகையை திருப்பி கொடுத்து 'தான் நேர்மையாளன் தான்' என்று நிரூபிப்பார் என நம்புகிறோம்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக