வெள்ளி, 2 செப்டம்பர், 2016

காஞ்சனா தற்கொலை முயற்சி: உண்மைக் காரணம் என்ன?

சட்டப்பேரவை வளாகத்தில் பெண் காவலர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவொற்றியூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருபவர் காஞ்சனா. இன்று, தலைமைச் செயலக வளாகத்தில் பணியில்இருந்தபோது தீக்குளிக்க முயன்று அதிகாரிகளால் காப்பற்றப்பட்டிருக்கிறார். முன்னாள் தடகள வீராங்கனையான காஞ்சனா, தற்கொலைக்கு முயன்றதுகாவல்துறையினரிடையே முக்கியமாகப் பேசப்படும்நிலையில், அவர்மீது தற்கொலை வழக்கு பதியப்படும் என்று தெரிகிறது. ஆனால் தன் பணியில் அவர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானதாலேயே தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் காஞ்சனா வீட்டில் சில மாதங்களுக்கு முன்னர் நகைகள் கொள்ளைபோனது. அது தொடர்பான புகார் கொண்டித்தோப்புகாவல் நிலையத்தில் கொடுத்தும்கூட இதுவரை துப்புக் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறுவதால், காஞ்சனா ஏற்கனவே மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில்,சென்னை சென்ட்ரல் அருகே காவலர் குடியிருப்பில் இருக்கும் தமக்கு கும்மிடிப்பூண்டியில் டியூட்டி போடுவதால் வந்து செல்வதும், தன்னுடைய தடகளப் பயிற்சிக்கு இந்தடியூட்டி இடைஞ்சலாக இருப்பதாகவும் பலமுறை உயரதிகாரிகளிடம் கூறியதாகவும் ஆனால் கும்மிடிப்பூண்டியைவிட தூரமான சிப்காட்டுக்கு டியூட்டி போட்டு மேலும்சிரமப்படுத்துகிறார்கள். குழந்தையை கவனித்துக்கொள்ள முடியவில்லை, குடும்பத்தோடு செலவிட நேரமில்லை என பல நாட்களாகவே புலம்பிவந்த காஞ்சனா இன்று,தற்கொலைக்கு முயன்றார் என்பதுதான் சிலர் கசியவிடும் காரணமாம். ஆனால் உண்மையான காரணம் வேறு.அது அதிமுக-வுக்கும், திமுக-வுக்கும் இடையே நடந்த சட்டமன்ற மோதல் தொடர்பானது என்கிறார்கள் விஷயமறிந்த வட்டாரங்கள்.கடந்த ஆகஸ்ட் 17- ஆம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட 79 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஒரு நாள் கழித்து 19ஆம்தேதி சட்டமன்ற வளாகத்தின் நான்காம் வாயில்வழியாக சேர்கள், மைக் செட்டுகள், கையால் அடிக்கும் பெல்களோடு நுழைந்த திமுக உறுப்பினர்கள் அங்கே போட்டிசட்டமன்றத்தை நடத்தினார்கள். இது, அனைத்து தொலைக்காட்சிகளிலும் இரண்டு மணி நேரம் லைவ் ஆக ஒளிபரப்பாக, அதன்பின்னரே காவலர்கள் வந்து அவர்களைகலைந்துபோகச் சொன்னார்கள். அன்று திமுக உறுப்பினர்கள் நுழைந்த நான்காம் எண் நுழைவுவாயிலின் பொறுப்பு காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தவர்தான்காஞ்சனா. இது, பலத்த சர்ச்சைகளை அரசு மட்டத்தில் ஏற்படுத்த, பூக்கடை காவல் நிலைய எல்லைக்குள்தான் தமிழக சட்டமன்றம் வருகிறது. இதனால் பூக்கடை துணைஆணையர் சக்திவேலை கடலோர பாதுகாப்புக் குழுவுக்காக ராமநாதபுரத்துக்கு டிரான்ஸ்பர் செய்தது அரசு. ஆனாலும் போட்டி சட்டமன்றம் நடந்தபோது அந்த இடத்தில்,சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையர் ஸ்ரீதர், பூக்கடை துணை ஆணையர் சக்திவேல், அம்பத்தூர் துணை ஆணையாளர் சுதாகர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர்ஜெயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையில் கூடுதல் காவலர்கள் அந்த இடத்தில் இருந்தனர். அவர்கள்மீது நடவடிக்கை எதுவும் இல்லாத போது, பூக்கடை துணைஆணையர் மாற்றப்பட்டு பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்த, உயரதிகாரிகளோ நான்காவது கேட்டுக்கு பொறுப்பான காஞ்சனாவைப் பிடித்து கேள்விமேல் கேள்வி கேட்டுடார்ச்சர் செய்து வந்துள்ளார்கள்.மிகக் கடுமையாக நடத்தப்பட்ட அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி ‘யாராக இருந்தாலும் வருகிறவர்களை உள்ளே விடாவிட்டால் உடனே அவர்கள் மொபைலை எடுத்து இந்த உயரதிகாரிகளுக்குத்தான் போன்போடுவார்கள். அவர்களும் நம்மிடம் உள்ளே அனுமதியுங்கள் என்பார்கள். ஆனால், பிரச்னை என்று வந்தபிறகு நம்மைப் போட்டு துன்புறுத்துகிறார்கள்’ என, கடந்த சில நாட்களாகவே சக காவலர்களிடம்

புலம்பியிருக்கிறார்.உயரதிகாரிகளில் இந்தக் கேள்விகள் ஒரு கட்டத்தில் எல்லை கடந்ததோடு காஞ்சனாவை சகட்டுமேனிக்கு டியூட்டி போட்டுடார்ச்சர் செய்ததில் மன முடைந்த அவர், சட்டமன்றத்தின் இறுதிநாளான இன்று அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே தீக்குளிக்க முயன்றதாகத் தெரிகிறது.தலைமைச் செயலகத்தின் நான்காவது நுழைவுவாயிலில் டியூட்டில் இருந்த காஞ்சனா, தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்கமுயன்றிருக்கிறார். இப்போது, விசாரணை வளையத்தில் இருக்கும் காஞ்சனாவை எவரையும் சந்திக்கவிடாமல் கடும் விசாரணை வளையத்தினுள் வைத்திருக்கிறார்கள்காவலர்கள்.   மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக