வெள்ளி, 30 செப்டம்பர், 2016

எல்லோயோர மக்கள் வெளியேறுகிறார்கள் ... பாக்கிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள உகந்த நாடு தரம் நீக்கப்படும்?

தினமலர்.காம் : புதுடில்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள, எம்.எப்.என்., எனப்படும்
வர்த்தகத்துக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தை, மறுபரிசீலனை செய்வதற்காக நடக்க இருந்த கூட்டம், திடீரென ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரியில், ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் உறவு மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு, 1996ல், நல்லெண்ண அடிப்படையில், எம்.எப்.என்., அந்தஸ்தை, இந்தியா வழங்கியது. இந்த அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய, இந்தியா திட்ட மிட்டுஉள்ளது.


இதற்காக, பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நேற்று கூட்டம் நடக்க இருந்தது. இந்நிலையில், திடீரென இந்த கூட்டம், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ள வர்த்தக அந்தஸ்து தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதில், 'சஸ் பென்ஸ்' நீடிக்கிறது.
'இந்தியாவுக்கு இழப்பில்லை' :

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான, 'அசோசெம்' வெளியிட்டுள்ள அறிக்கை: பாகிஸ் தானுக்கு வழங்கியுள்ள அந்தஸ்தை ரத்து செய்வ தால், இந்தியாவுக்கு எந்த இழப்பும் இல்லை. அந்த நாட்டுடன், நமக்கு உள்ள வர்த்தக நடவடிக்கைகள், நம் மொத்த வர்த்தக நடவடிக்கைகளில் மிகக் குறைவு. அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக