சனி, 10 செப்டம்பர், 2016

ஒரு வயது மகன் கண் முன்னே பெண் ஊழியரை பலாத்காரம்.... உயரதிகாரி தலைமறைவு

A 23-year- old woman has been allegedly raped in front of her one-year- old son by her boss during a field trip to Kodagu
பெங்களூரு: ஒரு வயது மகன் கண்முன்னே பெண் பணியாளரை உயரதிகாரி ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூரு  எலகங்கா கோகிலு கிராஸை சேர்ந்தவர் பிரியா(23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவர் கட்டுமான பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் கஸ்டமர் கேர் எக்ஸிகியூடிவாக பணியாற்றி வந்தார். இவர் பணியில் சேர்ந்த 2 மாதத்திலேயே  நிறுவனத்தின் பங்குதாரர் விவேகானந்தா என்பவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.  இதையடுத்து விவேகானந்தாவை கடுமையாக எச்சரித்த பிரியா,  போலீசில் புகார் அளித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து  அமைதியான விவேகானந்தா, பிரியாவை எப்படியாவது அடைய திட்டமிட்டார். பின்னர்  நிறுவனத்தின் சார்பில் குடகுவுக்கு களப்பணி மேற்கொள்ள  கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்தார். அதில்  பிரியாவும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பிரியாவின்  சொந்த ஊர் குடகு என்பதாலும் அவரது தாயார் அங்கு வசிப்பதாலும்,  விவேகானந்தாவுடன் நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரர் வருவதாலும் அவர் இதை  பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து தனது ஒருவயது மகனை  அழைத்துக்கொண்டு அவர் குடவுக்கு புறப்பட்டார்.
குடகுக்கு சென்ற விவேகானந்தா  விராஜ்பேட்டையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை பதிவு செய்தார். பின்னர்  பிரியாவை அந்த அறையிலேயே தங்கும்படி கட்டாயப்படுத்தினர்.
இதனால் பிரியா ஓட்டல் அறையில்  தங்கியுள்ளார்.  மறுநாள் காலையில் நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரர் அவசர  வேலையாக பெங்களூரு புறப்பட்டு சென்றுவிட்டார். பிரியா தனது ஒரு வயது  மகனுடனும், விவேகானந்தா மட்டுமே அறையில் இருந்தனர்.
இந்நிலையில்  பிரியா ஓட்டல் அறையில் குளிப்பதை விவேகானந்த படம் பிடித்துள்ளார். பின்னர்  அதை பிரியாவிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.  ஆனால் இதற்கு பயப்படாத பிரியா அவரை எச்சரித்துள்ளார். ஆனால் விவேகானந்தா,  குளிக்கும் வீடியோவை உனது கணவருக்கு காட்டுவதுடன், ஆன்லைனில் வெளியிடுவேன்  என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த பிரியாவின் பலவீனத்தை  பயன்படுத்தி கொண்ட விவேகானந்தா, அவரது ஒரு வயது மகன் கண்முன்னே அவரை  பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அடுத்த சில நாட்கள் பிரியாவை தனது  ஆசைக்கு பயன்படுத்தி கொண்டார்.
இதையடுத்து விவேகானந்தா ஜக்கூர் சாலையில்  ஒரு அபார்ட்மென்ட் வீடு வாடகைக்கு எடுத்து பிரியாவை அதில் தங்கவைத்தார்.  செக்யூரிட்டி கார்டுகளிடம் அவள் தனது மனைவி என்று அறிமுகம் செய்து  வைத்துள்ளார். வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டு விடுவாரோ என்ற பயத்தில்  பிரியாவும் ஒன்றும் பேசாமல் மவுனமானார். இதையடுத்து சம்பவம் குறித்து  பிரியாவின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து மனைவியை அழைத்துக்கொண்டு  போலீஸ் நிலையம் சென்ற அவர் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்ததை அறிந்து  கொண்ட விவேகானந்தா ஆந்திர மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார். பின்னர் கீழ்  நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது  அலுவலகத்தில் அவர் பிசினஸ் டிரிப்பில் இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால்  போலீசார் அதை நம்ப தயாராக இல்லை. எனவே அவரை கைது செய்ய தீவிரம் காட்டி  வருகின்றனர்.   தினகர.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக