வியாழன், 1 செப்டம்பர், 2016

ரம்யா :சுதந்திரத்துக்காக பாடுபடாத ஆர்எஸ்எஸ் தேசப்பற்று குறித்து பாடம் எடுக்கிறது

thetimestamil.com :முன்னாள் காங்கிரஸ் எம்பியும் நடிகருமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சிப்பதன் மூலம் தொடர்ந்து செய்திகளில் வந்துகொண்டிருக்கிறார்.
சமீபத்தில் பாகிஸ்தான் நல்ல நாடுதான், அங்கேயும் மக்கள் வசிக்கிறார்கள் என்று கூறி மத்திய அமைச்சர் மனோகர் பரிக்கரின் பாகிஸ்தான் நரகம் என்ற கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அதையடுத்து அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்தது கர்நாடக மாநில பாஜக. திவ்யாவை எதிர்ப்பு போராட்டங்களும் நடந்தன. பாஜக காலூன்றியிருக்கும் கர்நாடகாவில் திவ்யாவின் பேச்சு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மைசூரில் நடந்த இளைஞர் காங்கிரஸின் யாத்திரை தொடக்க விழாவில் பேசிய திவ்யா, ஆர் எஸ் எஸ்ஸோ, பாஜகவோ இந்திய சுதந்திரத்துக்காக பாடுபடவில்லை. மாறாக பிரிட்டீஷாரின் பக்கம் நின்றார். இவர்கள்தான் தேசப்பற்று குறித்து பாடம் எடுக்கிறார்கள் என பேசினார். இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
இதுகுறித்த திவ்யாவின் ட்விட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக