திங்கள், 12 செப்டம்பர், 2016

கர்நாடகா சட்டம் ஒழுங்கு கேள்விகுறி? கலவரங்களின் பின்னணியில் போலீஸ்? ஆட்சியாளர்கள்?

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளநிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உதவிசெய்வோம் என்று மத்திய அரசு உறுதியளித்து உள்ளது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.< மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி பேசுகையில், “கர்நாடக மாநில தலைமை செயலாளருடன் தொடர்பில் உள்ளேன் மற்றும் கர்நாடக கோரும் உதவி எதுவாகினும் வழங்கப்படும்,” என்று குறிப்பிட்டு உள்ளார். காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
 சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகம் கடந்த 6-ந்தேதி இரவு முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது.& இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”செப்டம்பர் 20-ஆம் தேதி வரை தினமும் 12,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்'' என்று இன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து பெங்களூருவில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் வாகனங்களை அடித்து நொறுக்கிஉள்ளனர். தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.  தமிழர்களின் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  

பெங்களூரு, மைசூர் மற்றும் மாண்டியாவில் வன்முறை ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு சிட்டியில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். வன்முறை தொடர்பான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.  தினத்தந்தி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக