செவ்வாய், 6 செப்டம்பர், 2016

அய்யய்யோ நான் ஏதோவொரு ப்லோவுல சொல்லிட்டேன் ! பதறும் டி டி

விஜய் டிவி-யில் டிடி தொகுத்து வழங்கும் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். அதில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் தொகுப்பாளினி டிடி, சமீபத்தில் உங்களைப் பற்றி வந்த கிசுகிசுவில் எது மிகவும் பிடித்தது? எனக் கேட்டார். இதற்குப்பதிலாக கீர்த்தி சுரேஷ், என்னை ரசிக்கவைத்த கிசுகிசுவாக காமெடி நடிகர் சதிஷ்க்கும் எனக்கும் காதல் என்று வந்த செய்திதான் என்று கூறினார்.
கீர்த்தி சுரேஷ் கூறியதற்குப் பதிலாக டிடி, கிசுகிசுவை பரப்புவதற்கு சதீஷ் 1000 ரூபாய் கொடுத்து அப்படி செய்தி வெளியிடச் சொல்லியிருப்பாரோ! எனக் கூறினார். இப்படியாக காசு வாங்கிக்கொண்டு செய்தி பரப்புவதைப்போல் செய்தியாளர்களைப் பேசி அவமானப்படுத்திய டிடி-க்கு செய்தியாளர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதில் மீடியாவில் பல வருடங்களாக இருக்கும் செய்தியாளர்களை இவ்வாறாக அவமதிப்பது அதிர்ச்சியாகவுள்ளது எனவும் இனி, டிடி பற்றிய எந்தச் செய்தியும் பத்திரிகையில் வராது எனவும், சிலர் டிடிக்கு ஃபோன் செய்து தங்கள் அதிருப்தியை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த வருடத்தில் டிடி, விஜய் டிவி-யில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். அச்சமயத்தில் சில பத்திரிகையில், டிடி கருவுற்றிருப்பதாகவும் கணவருடன் சண்டையிட்டு பிரிந்துவிட்டார் என, பல அவதூறு செய்திகள் பத்திரிகையில் பரவியது. அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்படியாகப் பேசுகிறார் எனவும் பத்திரிகையாளர்கள் சிலர் தெரிவித்தனர். இப்படியாக தொடர்ந்து எதிர்ப்புகள் வந்ததால் தொகுப்பாளினி டிடி, தனது ட்விட்டர் தளத்தில் இதற்காக மன்னிப்புக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: நான் பத்திரிகை துறையினர்மீது பெரும் மதிப்பு வைத்துள்ளேன். அந்நிகழ்ச்சியில் நான் அவ்வாறு கூறியது என் விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்தவே தவிர பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை. இதனால், தாங்கள் வருத்தப்படும்படி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என, டிடி என்ற திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக