வியாழன், 8 செப்டம்பர், 2016

தமிழச்சியின் புதிய விடியோ .. சுவாதி கொலையில் பாஜகவுக்கு தொடர்பு !

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டதில் இருந்தே இந்த வழக்கு குறித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் தமிழச்சி.இவர் பதிவிட்டு வந்த பல பதிவுகள் வழக்கின் விசாரணை சரியாக செல்லவில்லை, ராம்குமார் உண்மை குற்றவாளி இல்லை, சுவாதியின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது, இந்து, ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினருக்கும் இதில் தொடர்பு உள்ளது என்பவை ஆகும்.பிரான்ஸில் இருந்து இந்த தகவல்களை கூறி வரும் தமிழச்சி தான் கூறிய அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறி வந்தார். இந்நிலையில் தனக்கு பாஜகவினர் சிலர் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆபாச தாக்குதலும் நடத்தி வருவதாக கூறிய தமிழச்சி அது தொடர்பாக அவர்கள் மீது இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சுவாதி படுகொலை விசாரணை தொடர்பாகவும், அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க / இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் விடுத்த கொலை மிரட்டல்கள் ஆதாரங்கள் சேமிக்கப்பட்டு இதற்காக இந்திய சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க முயல்வது என்று ப்ரெஞ்ச் சட்ட ஆலோசகர்களுடன் விவாதித்து இந்திய வழக்கறிஞர்களிடம் தொடர்பு கொண்டுள்ளோம்.

இதற்காக கடந்த 1 வாரமாக கடும் முயற்சியில் இருந்ததால் சுவாதி தொடர்பான எந்த தகவல்களையும் இணையத்தில் பதிவிடுவதை தற்காலிகமாக தவிர்த்து வந்தேன். இன்று அணைத்து ஆவணங்கள், ஆதாரங்கள் சில இந்திய வழக்கறிஞர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அநேகமாக இன்னும் இரு தினங்களில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்திய வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின் அறிவிப்பார்கள்.
இந்திய வழக்கறிஞர்கள் என்ன காரணத்திற்கான எனது புகார் என்பதை எழுத்து வடிவிலும் காட்சி வடிவிலும் புகார் பதிவை இந்திய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதால் சில வீடியோ காட்சியும் எடுக்கப்பட்டது. அதில் இருந்து சில உங்கள் பார்வைக்காக...  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக