வியாழன், 15 செப்டம்பர், 2016

ஜெயலலிதாவுக்கு சீமான் கடும் கண்டனம் ! தமிழன் தாக்கப்படும்போது கட்சியில் இணையும் விழா தேவையா?


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் காவேரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் சேரன், அமீர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கர்நாடகாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். பிரச்சனை கொழுந்துவிட்டு எரிகிறது. ஒவ்வொரு தமிழனும் அடித்து அவமானப்படுத்துப்படுகிறான். அடித்து நொறுக்கப்படுகின்றனர். லட்சக்கணக்கான பேர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் கட்சியின் வளர்ச்சிக்கு புதிதாக வருபவர்களை இணைப்பதற்கு ஒரு விழா. ஏன் இந்த விழாவை இந்த சிக்கல்கள் தீர்ந்த பிறகு நடத்த முடியாதா. தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். கர்நாடக அரசு தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அரசு ஒரு சின்ன அறிக்கைக் கூட கொடுக்கவில்லை. இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார். நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக