ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

திமுக முப்பெரும் விழா அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது

தி.மு.க. முப்பெரும் விழா 17-09-16 தேதி அன்று அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. இங்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பாக 2016 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, 27 பேருக்கு தலா ரூ. 10, 000 விதம் மொத்தம் ரூ. 2, 70, 000 வழங்கப்பட்டது. முரசொலி அறக்கட்டளை மூலமாக பாவேந்தர் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் பள்ளி, கல்லூரியில்&நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு 10 பேர்களுக்கு மொத்தம் 72, 000 வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து முரசொலி அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருதுகளும், ரொக்களும் பேருக்கு வழங்கப்பட்டது.;தி.மு.க. முப்பெரும் விழா 2016 பெரியார் விருது பேராசிரியர் அ. அய்யாசாமிக்கும், அண்ணா விருது விஜயா தாலன்பனுக்கும், பாவேந்தர் விருது திண்டுக்கல் ஜ. லியோனிக்கும், கலைஞர் விருது காரைக்குடி என். பெரியசாமிக்கும் வழங்கப்பட்டது.


மு.க. ஸ்டாலின் பேசுகையில், இந்த முப்பெரும் விழா என்பது அறிஞர் அண்ணா பிறந்த நாளையும்,பெரியர் பிறந்த நாளையும், தி.மு.க. தொடங்கிய நாளையும் முன்று இனைந்தால் முப்பெரும் விழா என்று அக்காலதிருந்து இந்த இயக்கத்தின் பாடுபடும் தொண்டர்கள் இருக்கும் வரையிலும் பெருமை, ஊக்கம் என்றும் எங்களின் உயர்த்தி நிறுத்தும்.
இந்த விருது ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த தி.மு.க. வுடன் பாடுபட்டவர்களுக்கு;வழங்கப்படுகிறது. இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இறுதி உரையாக கலைஞர் பேசுகையில்,  அன்பார்ந்த பெரியோர்களே, அன்பார்ந்த தாய்மார்களே, என் உயிரினுமேலான என் உடன்பிறப்புக்களே, தொண்டர்களே இந்த முப்பெரும் விழாவில் விருதுக்கு எழுச்சியோடு மகிழ்ச்சியோடு வழிந்த இந்த அரங்கமே அதிர்கிறது.
எங்களின் ஒற்றுமை 10 அடியில் இருந்து 100 அடியாக உயர்ந்து உள்ளது தி.மு.க. ஒவ்வொரு நன்பருக்கும் பொது நல்லஉடமைகளும் நல்ல பேச்சிலும், முகத்திலும், உள்ளத்திலும், நம்பிக்கை உள்ளது தெரிகிறது. இயக்கத்தையும், கழகத்தையும் பேசுகின்ற திட்டத்தை தொடங்கும் அதனை என் உள்ளமும், உறுதியால் என்னிடம் திறன் உள்ள வரைலும்
என் கண் மூடுமுன் இந்த தி.மு.காவை உயர்த்தி நிறுத்திய பின்பே என் கண் மூடுமே என்று மனம் கசிய பேசியும் கலைஞருகும், அன்பழகனுக்கும் உள்ள நட்பு என்றும் எவராலும் பிக்கவும், அழிக்கவும் முடியாது’’என்று தெரிவித்தார்.- அருண்பாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக