வியாழன், 29 செப்டம்பர், 2016

பாக் அதிபர் நவாஸ் ஷெரிப் : பதிலடிக்கு நாங்களும் தயார்..பலவீனமாக கருத வேண்டாம்

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் பாக்.,எல்லையில் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருப்பதாவது:பாக்., எல்லை பகுதியில் இந்தியா அத்து மீறல் நிகழ்த்தியுள்ளது. 2 பாக்., படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் காயமுற்றுள்ளனர். இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இதனை ஏற்க முடியாது. இந்திய ராணுவம் கூறுவது போல் பெரும் கொடூர தாக்குதல் ஏதும் இல்லை என எங்களின் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அமைதியாக இருப்பதை எங்களின் பலவீனமாக கருத வேண்டாம். எதையும் சந்திக்க தயார். பாகிஸ்தான் மக்களை காத்திட பதில் தாக்குதல் நடத்த நாங்களும் தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பாக்., ராணுவம் இது தொடர்பாக கூறுகையில்; இந்தியா தாக்குதல் என்பது பொய். எல்லை தாண்டி இந்திய துருப்புகள் எதுவும் வரவில்லை. எல்லையில் இந்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என கூறியுள்ளது. இதற்கிடையில் பாக்., பாதுகாப்பு துறை அமைச்சகத்துடன் பிரதமர் நவாஸ் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக