வியாழன், 1 செப்டம்பர், 2016

அன்புமணியை சிபி ஐ விசாரணை நடத்தலாம்! டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி

புதுடில்லி: மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2009 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்தூர் மற்றும் லக்னோவில் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார் என புகார் எழுந்தது. இது பற்றி சி.பி.ஐ., அன்புமணி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை டில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு டில்லி ஐகோர்ட்டில் அன்புமணி இடைக்கால தடை வாங்கினார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மாற்ற வேண்டும் எனவும் அவர் மனுத்தாக்கல் செய்தார்.    இப்போ பாருங்க தமாஷாவை தாமரை மணாளனாகிடுவார்


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்புமணி மனு காரணமாக சி.பி.ஐ., கோர்ட்டில் விசாரணை நடத்த முடியவில்லை. விசாரணை நடத்த ஏதுவாக இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறினார்.
இதனையடுத்து, அன்புமணி மீதான வழக்கை சி.பி.ஐ., கோர்ட் விசாரிக்க தடையில்லை என நீதிபதி உத்தரவிட்டார்  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக