ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஒழிக்கப்பட்ட ‘ஜமீன்’ வார்த்தையைப் புகுத்துவது பட்டியலின மக்களுக்கு துன்பமாகும்: கிருஷ்ணசாமி எதிர்ப்பு

thetimestamil.com  : ஒழிக்கப்பட்ட சாதிய வார்த்தைகளை மீண்டும் புகுத்துவது
பட்டியலின மக்களுக்கு துன்பமாக முடியும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ‘ஜமீன் கயத்தாறு’ என தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய தாலுகாவுக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
“தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக ஜமீன் கயத்தாறு என்ற பெயரில் புதிய தாலுகாவை உருவாக்கப்போவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜமீன் என்ற வார்த்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வற்புறுத்தலின் அடிப்படையில் ஜமீன் என்ற பெயருடன் கயத்தாறு தாலுகாவை உருவாக்கினால் அது பிற சமுதாய மக்களுக்கு குறிப்பாக பட்டியலின மக்களுக்கு பெரும் துன்பமாக முடியும் என்பது எங்கள் கருத்து. எனவே, புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகிற 28ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக